காஸ் சிலிண்டர் விலை உயர்வு!

Published On:

| By Balaji

மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 7 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31ஆம் தேதி, மத்திய எண்ணெய் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் மக்களவையில் பேசுகையில், “அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து மானியங்களையும் அகற்றும் விதமாக, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ஒவ்வொரு மாதமும் 4 ரூபாய் அதிகரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது” என்று தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

ADVERTISEMENT

இதன்படி, செப்டம்பர் 1ஆம் தேதி மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 7 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2.31 ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்பட்டது. அதை ஈடுகட்டும் விதமாக தற்போது 7 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தகவலின்படி, டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை முன்பு 479.77 ரூபாயாக இருந்தது. தற்போது இதன் விலை 487.18 ரூபாயாக அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share