இத்தாலி செல்லும் தேனி வாழை!

Published On:

| By Balaji

தேனி மாவட்டத்திலிருந்து முதன்முறையாக இத்தாலி நாட்டுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திலிருந்து முதன்முறையாக இத்தாலி நாட்டுக்குக் கப்பலில் 21 டன் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 31ஆம் தேதி கொச்சின் துறைமுகம் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த முதல் ஏற்றுமதியைத் தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு சென்னையிலிருந்து காணொளிக் காட்சி வழியாகக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கப்பல் இன்று (நவம்பர் 1) இத்தாலிக்குக் கிளம்புகிறது. அடுத்த 24 நாட்களில் இத்தாலி நாட்டின் திரீஸ்டே துறைமுகத்துக்கு இந்தக் கப்பல் சென்றடையும். இந்த முயற்சியால் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் கடல் வழியாக வரும்காலங்களில் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.பி.கருப்பையா *பிசினஸ் லைன்* ஊடகத்திடம் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் 18,000 ஹெக்டேரில் *கிராண்ட் நைன்* வாழை பயிரிடப்பட்டுள்ளது. மொத்தமாக 90,000 ஹெக்டேரில் இவ்வாழை பயிரிடப்பட்டுள்ளது. விவசாயிகள் அறுவடைக்கு முந்தைய பயிற்சிகளை மேம்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு இவ்வாழைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share