ஆஸ்கருக்கு செல்லும் முதல் இலங்கை படம்!

Published On:

| By Balaji

இலங்கை சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக ‘தி ஃபிரோஸேன் ஃபயர்’ (The Frozen Fire) எனும் முழுநீளத் திரைப்படம் ‘பெஸ்ட் பிக்சர்’ பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு இலங்கை திரைப்படங்கள் ‘பெஸ்ட் ஃபாரின் லாங்குவேஜ் மூவி’ எனும் கேட்டகிரியில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. உலகளாவிய சிறந்த திரைப்படப் பிரிவில் இலங்கை படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இதுவே முதன் முறை.

India based All Lights Film Services எனும் நிறுவனம்தான் இந்தியத் திரைப்படங்களை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யும் செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் இதுவரை 14-க்கும் மேற்பட்ட படங்களை பரிந்துரை செய்துள்ளது. பாலேட் ஆஃப் ரஸ்தம், காமசூத்ரா 3டி, புலிமுருகன், டாம் 999, கலர் ஆஃப் ஸ்கை போன்ற படங்கள் இவர்கள் பரிந்துரை செய்ததில் குறிப்பிடத்தக்கவை.

ADVERTISEMENT

தி ஃபிரோஸேன் ஃபயர் திரைப்படத்தின் முதல் காட்சி நேஷனல் ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆஃப் இலங்கையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று திரையிடப்பட்டது. இந்த ஆண்டு இப்படம் ஆஸ்கார் விருதை வெல்லும் என்று பரவலான விமர்சனங்கள் இப்படத்தின் மீது வைக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு முன்பே ஆயுதம் ஏந்தி இலங்கை அரசுக்கு எதிராக போராடிய சிங்கள இயக்கம் ஜே.வி.பி. இதன் தலைவர் ரோஹண விஜய வீர. சேகுவாரா பாணியில் ஆயுதங்தாங்கிய புரட்சி நடத்த திட்டமிட்ட இந்த இயக்கம் இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த படைகளினால் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது. பிறகு, ரோஹண விஜய வீர ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். கைதுக்கு பிறகு என்ன ஆனார் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

ADVERTISEMENT

அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு தி புரோஸன் பயர் என்ற படம் தயாராகியுள்ளது. அனுருத்த ஜெயசிங்கே இயக்கியுள்ளார். சிங்கள முன்னணி நடிகர் கமல் ஹத்தர ஆரோச்சி, ரோஹண விஜய வீர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இலங்கையின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தபடம் 2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share