ADVERTISEMENT

அயன் மேனின் அடுத்த அவதாரம்!

Published On:

| By Balaji

அவெஞ்சர்ஸ்: தி எண்ட் படத்தைத் தொடர்ந்து ராபர்ட் டவுனி ஜூனியர் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

முன்னணி ஹாலிவுட் நடிகராக வலம் வரும் ராபர்ட் டவுனி ஜூனியர் ஆங்கிலத் திரைப்பட நடிகர்களில் அதிக சம்பளம் பெறும் ஒருவராக விளங்குகிறார். இவரது நடிப்பில் வெளியான அயன் மேன் படத்தின் மூன்று பாகங்களும் சர்வதேச அளவில் இவருக்கு ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

ADVERTISEMENT

சமீபத்தில் வெளியான மார்வெலின் அவெஞ்சர்ஸ்: தி எண்ட் கேம் படத்தில் அயன் மேன் கதாபாத்திரம் கிளைமேக்ஸில் இறந்துவிடும். இப்படம் உலக பாக்ஸ் ஆபிஸ் வசூல் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும் அயன் மேன் ரசிகர்களால் அவர்களது மனம் கவர்ந்த சூப்பர் ஹீரோவின் இழப்பை தாங்கிக்கொள்ளமுடியவில்லை.

இந்நிலையில், அயன் மேனைத் தொடர்ந்து ராபர்ட் டவுனி ஜூனியர், ஷெர்லாக் ஹோம்ஸ் சீரிஸின் மூன்றாவது பாகத்தில் நடிக்கவுள்ளார். பிரபல துப்பறிவாளர் கதாபாத்திரமான ஷெர்லாக் 2009ஆம் ஆண்டு திரைப்படமாக மாறிய போது ராபர்ட் தான் அப்பாத்திரத்தை ஏற்று நடித்தார். அதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் 2011ஆம் ஆண்டு வெளியானது. இவ்விரு பாகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

ADVERTISEMENT

தற்போது இதன் அடுத்த பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ராபர்ட் டவுனி அயன் மேன் முகமூடியைக் கழட்டிவிட்டு, மீண்டும் தன் துப்பறியும் கண்ணாடியை அணியவுள்ளார். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி ஷெர்லாக் ஹோம்ஸ் மூன்றாம் பாகத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் உலகெங்கிலும் திரையிடவுள்ளது.

ADVERTISEMENT

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share