போன வாரம், நான் சொன்ன மாதிரியே வீக்கெண்ட் ஆரம்பித்தவுடனே அதிமுக தரப்பு ஆன்லைன் போராளிகள், மம்மி படத்து வண்டு மாதிரி சாரிசாரியாக வெளியேறி வந்து ஒரு வாரமாய் திமுக தரப்பினர் கலாய்த்ததுக்கு மறு மொய் எழுத ஆரம்பித்தனர். இரண்டு நாளைக்கு முன் ‘ஓபிஎஸ்4சிஎம்’ என அதிமுக-வின் அடுத்த முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ். என திமுக-வினர் டேக் போட்டதற்கு பதிலடியாக ‘அழகிரி4டிஎம்கே’ என எதிர் சேவலை இறக்கிவிட்டனர். நம்மளை மாதிரி வேடிக்கை பார்க்கிற ஆளுக்கு எவ்வளவு எண்டர்டெயின்மென்ட் காத்துக்கிட்டு இருக்கு இணையத்தில். அதிமுக ஆதரவு டிவிட்களில் சிலது, ரொம்ப விரசமாக இருந்தாலும் சில ட்விட்டுகள் கெக்கபிக்கே என சிரிக்கவைத்தது உண்மை. எல்லாமே அதில ஒருத்தன் சொல்றான்” ரேஞ்சு ட்விட்டுகள்தான்.
// Saravanakumar @m9444010076s
அழகிரி தான் நிஜ கெத்து மத்தவன்லாம் வெத்து..
மேடையிலே கால் பண்ணி மொக்க வாங்கியதா சரித்திரம் இல்ல
#Alagiri4DMK //
// Smiley Boy 🙂 @magicumesh
@dhayaalagiri
ராமாயணம் to கோபாலபுரம்…
மூத்தவனுக்கு தான் அரியாசனம் 🙂
#Alagiri4DMK //
// TN_Polls @tn_polls
ஆம்பள சிங்கம் டா .,செல்பி எடுக்க வந்தா அடிக்க மாட்டார் டா…!#Alagiri4DMK//
//சின்னப்பன்$$தாஸ்$$ @Chinnappan_Das
#Alagiri4DMK ரொம்ப தைரியமான, எந்த பிரச்சினையையும் சாதரணமா எதிர் கொள்ற தலைவனே என்றால் அழகிரி என் சாய்ஸ்//
MOHANAVEL @mohanvelz 13h13 hours ago
தனக்குபின் பிறந்தவன் #தளபதி என்றால் ..
தான் தளத்தின் தலைவன் #அழகிரி
#Alagiri4DMK
Jeyakumar @thattan_jay 13h13 hours ago
திருமங்கலம் இடைத்தேர்தலை உலகம் முழுதும் பேச செய்தவரே..
#100crores_திருமங்கலம் #Alagiri4DMK
இந்த ரணகளத்துக்கிடையில், அழகிரியின் மகன் தயா அழகிரியும் விஜயகாந்து திமுக-வுடன் கூட்டணி கிடையாது எனப் பேசிய பழைய பேட்டியின் போட்டோவை பகிர்ந்து டெம்போவை ஏத்தினார். நேற்று, தேர்தல் தேதி அறிவிப்பு 3 மணிக்கு அறிவிக்கப்படுகிறது என செய்திவந்த சில நிமிடங்களில் ‘ராஜீவ் கொலைவழக்கு தண்டனைக் கைதிகள் மூவர் விடுதலை’ என செய்தி வெளியாகி பரபரப்பானது. சமூக ஊடகங்களிலும் காட்டுத்தீ போல இந்தச் செய்தி பரவியது. அதன்பின்னர் இது, வதந்தி என தெரியவந்தபோது தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. இதுபற்றி பல்வேறு தரப்பினரும் முகநூல், ட்விட்டர் என பல இடங்களில் தமிழக அரசுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்திட்டுக் கொண்டிருந்தனர். அரசுக்கு எதிரான கருத்துப் படத்தில் பொட்டில் அடித்தாற்போல் இருந்தது மேலுள்ள படம்தான் .
-லாக் ஆஃப்,”
