ADVERTISEMENT

ஹூண்டாய் நிறுவனம் 6180 கோடி ரூபாய் முதலீடு!

Published On:

| By Kavi

சென்னையில் இன்று (ஜனவரி 7) நடைபெற்று வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுக்கும் ஹூண்டாய் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

காஞ்சிபுரத்தில் ஐசிஇ மற்றும் மின்சார கார்கள், பேட்டரி தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் 6180 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது.

ADVERTISEMENT

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய ஹூண்டாய் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இயக்குநர் உன்சூ கிம், “மின்சார வாகன உற்பத்தி, சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்காக கடந்த ஆண்டு 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தோம். கூடுதலாக இப்போது 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலரை எட்ட ஹூண்டாய் நிறுவனம் உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

சென்னை ஐஐடியுடன் இணைந்து ஹைட்ரோஜன் எரிபொருள் புத்தாக்க மையத்தையும் ஹூண்டாய் நிறுவனம் அமைக்கவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

பிரியா

டாடா எலக்ட்ரானிக்ஸ் : 12,082 கோடி முதலீடு 40,500 பேருக்கு வேலை!

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது: பியூஷ் கோயல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share