சாம்சங் ஊழியர்கள் பணிநீக்கம் – உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதியில்லை: நீதிமன்றம்!

Published On:

| By Kavi

சாம்சங் ஊழியர்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் தொழிற்சங்கத்தை அங்ககீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று (நவம்பர் 6) விசாரணைக்கு வந்தது.

அப்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

இம்மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணயை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

விஜய் அதிமுகவை விமர்சிக்காதது ஏன்?: ஜெயக்குமார் பதில்!

டிரம்ப் வெற்றி: மோடி முதல் நெதன்யாகு வரை… உலக தலைவர்கள் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share