வங்கதேசத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி!

Published On:

| By admin

வங்கதேசத்தின் உள்நாட்டு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். வங்கதேசத்தின் கடல் துறைமுகமான சிட்டகாங் பகுதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு உள்நாட்டு சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 100 தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சேமிப்பு கிடங்கில் தீ விபத்து நடந்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்பொழுது அந்த சேமிப்பு கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து காரணம் குறித்து தற்போது இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த வெடி விபத்தில் சிக்கிய 100 தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு ராணுவ கிளினிக்குகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மேலும் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் தற்பொழுது தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த இருவரும் 60 முதல் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் மிக கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கதேச இன்லேண்ட் கண்டெய்னர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரூஹூல் அமின் சிக்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த விபத்து நடந்த சேமிப்புக் கிடங்கில் சில ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் இருந்தது. 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சேமிப்பு கிடங்கில் 600 பேர் பணியாற்றி வந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share