குங்குமப் பூவை சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது எவ்வளவு உண்மை?

Published On:

| By christopher

How true is it that eating saffron can cause fair skin?
குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தை கொடுக்காது.
பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும் என்பது உண்மை.
குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும்.
கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலுருந்து பாலில் காய்ந்த குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால், சிசுவிற்கும், தாய்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.
குங்குமப் பூவில் பல வேதிமப் பொருட்கள் புற்று நோய் எதிர்ப்பாக உள்ளதால் பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது. இலுப்பு, கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்க உதவும் என்ற காரணத்தினாலேயே குங்குமப்பூ கர்ப்பிணிப் பெண்களுக்கு சிபாரிசு செய்யப்படுகின்றது.
மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்களுக்கு குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகின்றது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு குங்குமப் பூ ஒரு வரப்பிரசாதம். மூட்டு வலி உள்ளவர்கள் குங்குமப் பூவினை எடுத்துக்கொண்டால் மூட்டு சதை வீக்கம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
குங்குமப் பூ ஜீரண சக்தியினை கொடுக்கிறது, ஆனால் அதனை அதிகளவில் எடுத்துக்கொண்டால் வாந்தி, மயக்கம், வயிற்றுப் பிரட்டல், பசியின்மை போன்றவை ஏற்படும்.
Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share