பியூட்டி டிப்ஸ்: உங்கள் முகத்தை எப்படிக் கழுவுகிறீர்கள்?

Published On:

| By Kavi

How to Wash Your Face Properly

காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு முகம் கழுவும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றுவோம். சிலருக்கு சருமத்தில் வறட்சி, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம்.

அதற்கு சரியான சருமப் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவதோடு, முகத்தை எப்படி கழுவ வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

முகத்தை சுத்தம் செய்வதற்கு முன்பு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

அழுக்கான கைகளை கொண்டு முகத்தை கழுவுவது, அழுக்கு துண்டை கொண்டு முகம் துடைப்பது போன்றவற்றால் சருமத்தில் பாக்டீரியா, அழுக்கு படிவதற்கும், சரும நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.

வெயில் காலத்தில் குழாயில் இருந்து வரும் சூடான நீர் முகம் கழுவுவதற்கு ஏற்றதல்ல. அது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் பசை தன்மையை அகற்றி, வறட்சி, எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு முகம் கழுவுவது தான் சரியானது.

முகத்தை கழுவும்போது உள்ளங்கைகள் அல்லது விரல் நுனிகளை கொண்டு மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்வது நல்லது.

கைகளை கொண்டு சருமத்தை அழுத்தி தேய்ப்பது, துணியைக் கொண்டு முகத்தை அழுத்தமாக துடைப்பது சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

காலையில் ஒருமுறை, இரவில் ஒருமுறை முகத்தை சுத்தம் செய்யலாம். வெளியே செல்பவராக இருந்தால் சுற்றுப்புற மாசுபாட்டால் முகத்தில் படியும் அழுக்கு மற்றும் வியர்வையை அகற்ற கூடுதலாக ஒரு முறை முகம் கழுவலாம்.

எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவராக இருந்தால் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவும்போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் நீங்கக்கூடும்.

எனவே சரும நிபுணர்களின் ஆலோசனை பெற்று அதற்கேற்ப செயல்படுவது சிறந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

டிஜிட்டல் திண்ணை: கண்டுகொள்ளாத அண்ணாமலை… நயினாரின் எம்.எல்.ஏ. பதவிக்கும் ஆபத்தா?

இந்த பிரச்சனை அவருக்கும் தெரிஞ்சிருச்சா: அப்டேட் குமாரு

”ஆலங்கட்டி மழ தாலாட்ட வந்தாச்சு…” வேலூர் மக்களை குளிர்வித்த மழை!

தமிழகத்தை மையம் கொண்ட வெப்ப அலை: பொதுமக்கள் உஷார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share