பியூட்டி டிப்ஸ்: ஹென்னாவை பயன்படுத்துவது எப்படி?

Published On:

| By christopher

How to use henna

நம்மில் பலர் தலைக்கு ஹென்னா (மருதாணி) தடவிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். புதிதாக ஹென்னாவைப் பயன்படுத்தும்போது இதைச் சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி என்கிற சந்தேகம் இருக்கிறது. இதற்கு அழகுக்கலை நிபுணர்களின் விளக்கம் இதோ… How to use henna

ஹென்னா போடுவதால் சிலருக்கு கூந்தல் முரடாக மாறலாம். குறிப்பாக, சுருட்டை முடி உள்ளவர்களுக்கு ஏற்கெனவே கூந்தல் வறட்சியாக இருக்கும். அவர்கள் ஹென்னா உபயோகிக்கும்போது கூந்தல் வறட்சி இன்னும் அதிகமாகலாம். How to use henna

அதுவே ஸ்ட்ரெயிட் ஹேர் உள்ளவர்களுக்கு ஹென்னா நன்றாகப் பொருந்தும். சிலர் மருதாணி இலைகளைப் பறித்து அரைத்து அப்படியே தலையில் தடவிக் கொள்கிறார்கள். அதுவும் தவறு. அது ரொம்ப ஸ்ட்ராங்கானது என்பதால் கூந்தலை அளவுக்கதிகமாக வறண்டுபோகச் செய்துவிடும்.

எனவே, மருதாணி இலைகளைக் காயவைத்துப் பொடி செய்து உபயோகிப்பதுதான் சரியானது.

200 கிராம் மருதாணி பொடியுடன் 2 டேபிள்ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்துக்கொள்ளவும். 20 மில்லி காபி டிகாக்‌ஷனும் அரை எலுமிச்சைப்பழத்தின் சாறும், சிறிய கப் தயிரும், ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

வறண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு எண்ணெய் சேர்ப்பது உதவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளலாம், விருப்பமுள்ளவர்கள் முட்டை சேர்த்துக்கொள்ளலாம். முட்டை தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் முதல் நாள் இரவே இரும்புக் கடாயில் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலையில் முட்டை சேர்த்துக் கலந்து தலையில் தடவி ஒன்றிரண்டு மணி நேரம் வைத்திருந்து அலசினால் நல்ல கலர் கிடைக்கும்.

ஹென்னா ஏற்றுக்கொள்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள, சிறிதளவு ஹென்னா கலவையை கூந்தலில் ஒரு பகுதியில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து அலசிப் பார்க்கலாம். அந்தப் பகுதியில் கலர் ஒட்டியிருக்கிறதா அல்லது கூந்தல் வறண்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு அதற்கேற்ப அதை உபயோகிப்பதா, வேண்டாமா என முடிவு செய்யலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share