ஹெல்த் டிப்ஸ்: சம்மரில் ஏ.சி… பயன்படுத்துவது எப்படி?

Published On:

| By Minnambalam Desk

இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இருப்பிடத்தைக் குளுமையாக வைத்துக்கொள்ள முதல் கருவியாக இருக்கிறது ஏ.சி.

இந்த ஏ.சி-யை நீங்கள் எந்த அளவுக்குக் குளிராக வைத்திருக்கிறீர்களோ அந்த அளவு அது அறையின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். அடுத்து உங்கள் உடலில் தேவையான அளவு இருக்கும் ஈரப்பதத்தையும் அது உறிஞ்சிவிடும். இது உங்களுக்கு உடல் சோர்வை ஏற்படுத்தும். How To Use AC In Summer 2025

காலை முதல் மாலை வரை ஏ.சி குளிரிலேயே இருந்து பழகிவிட்டால் பின்னர் குறைவான வெயிலைக்கூட நம் உடல் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறும். திடீரென வெப்பநிலை மாற்றம் ஏற்படும்போது அதை உடல் ஏற்றுக்கொள்ளாமல் ஒவ்வாமை, சுவாசம் சீரின்மை போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

நாள்பட்ட நோய்கள், வாதப் பிரச்சினைகள் உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம். காரணம், அது உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைவாகவே வைத்திருக்கும். அதற்காக ஏ.சி பயன்படுத்தவே கூடாது என்றில்லை.

அதிக குளிர் இல்லாமல் மிதமான (23 – 25 டிகிரி) வெப்பத்தில் பயன்படுத்துதல் நலம்.  முறையாக ஏ.சி-யைப் பராமரிக்கவில்லை என்றால்கூட அதனால் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும். ஏ.சி ஃபில்டரை முறையாகச் சுத்தம் செய்து அழுக்கு, தூசி போன்றவற்றை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

இதற்கு மாற்றாக, உங்கள் வீட்டைச் சுற்றி நிறைய செடிகள், மரங்கள் இருப்பது போலப் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வீடு இருக்கும் சுற்றுப்புறத்தில் கொசுக்களைக் கட்டுப்படுத்திவிட்டாலே, நீங்கள் இரவின் இயற்கை காற்றில் ஜன்னலைத் திறந்து வைத்து உறங்கலாம். ஏ.சி-யின் தேவையே இருக்காது. எப்போதும் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொண்டால், வெயில் காலத்தைச் சுலபமாகக் கடந்துவிடலாம்” என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள். How To Use AC In Summer 2025

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share