தற்போதைய சூழ்நிலையில் மழை, குளுமையான காற்று ஒரு பக்கமென்றால், அதிகப்படியான ஈரப்பதத்தால் ஏற்படும் சருமப் பிரச்சினைகள் மறுபக்கம். இப்படிப்பட்ட நேரத்தில் கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் ஸ்மார்ட்டான தோற்றம் பெறவும் இந்த எளிமையான கைடன்ஸ் உதவும்.
வறண்ட கேசமோ, எண்ணெய்ப்பசை அதிகமுள்ள கேசமோ… மழை மற்றும் குளிர்காலத்தில் எல்லோருக்குமே முடி உதிர்வு அதிகமாக இருக்கும். தலை நனைவதற்கான வாய்ப்புகளும் அதிகம். சிலர் தலையைக் காயவைப்பதோடு நிறுத்திவிடுவார்கள். மழைநீர் சுத்தமான நீர்தான். ஆனால், நம் தலைமுடிக்கு நல்லதல்ல.
நம் கேசமும் நாம் வழக்கமாக உபயோகிக்கும் தண்ணீருக்குத்தான் பழகிப்போயிருக்கும். மழைநீர் தலையில் பட நேர்ந்தால், முடி உதிர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, ஒருவேளை தலை நனைய நேர்ந்தால், வீடு திரும்பியதும் ஒருமுறை தலைக்குக் குளித்துவிடுவது நல்லது.
வாரத்தில் மூன்று நாட்கள் நிச்சயமாகக் குளிர்ந்த நீரில் தலைக்குக் குளிக்க வேண்டும். அதீத குளிர் எனில், சிறிதளவு வெந்நீர் கலந்துகொள்ளலாம். கண்டிஷனர் உபயோகிப்பவர்கள் தாராளமாக அதைப் பயன்படுத்தலாம். சீயக்காய் உபயோகிப்பவர்கள், சிறிதளவு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் நிச்சயம் கேசம் வறண்டு போகாது.
மழைக்காலத்தில் கேசத்தைக் காயவைப்பது கடினம்தான். ஆனால், அதற்காக டிரையர் (Dryer) உபயோகிப்பது நல்லதல்ல. அது மேலும் தலைமுடியை வறட்சியாக்கும்.
இறுக்கமான கொண்டை, போனி டெயில் போன்ற ஹேர்ஸ்டைலை தவிர்ப்பது சிறந்தது. ஹேர் ஸ்ப்ரே போன்றவற்றையும் தவிர்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: அமெரிக்கன் சாப்ஸி
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பொன்முடிக்கு தண்டனை: அலர்ட் நிலையில் போலீஸ்!
2011-2023… எஃப்.ஐ.ஆர். முதல் தீர்ப்பு வரை- பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கின் முழு விவரம்!
