ஹெல்த் டிப்ஸ்: மன அழுத்தம் ஏற்படும்போது சாப்பிட நினைப்பவரா நீங்கள்?

Published On:

| By christopher

How to Stop Stress Eating

நம்மில் பலரும் பசித்துச் சாப்பிடுவதில்லை. பசியைத் தவிர பல்வேறு காரணங்களுக்காகச் சாப்பிடுகிறோம். அந்த வகையில் மன அழுத்தம் இருக்கும்போது பசியே இல்லாவிட்டாலும் சாப்பிடுவது ஒருவகை. அது மனதை ஆசுவாசப்படுத்துவதாக உணர்கிறோம். மன அழுத்தம் என்பது மனது சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, உடலும் சம்பந்தப்பட்டது.

மன அழுத்தம்  உண்டாகும்போது ஓர் உணவைப் பார்க்கும்போது உடனே சாப்பிடத் தோன்றும். அப்படிச் சாப்பிடும்போது தற்காலிகமாக நம்மை நாமே  மன அழுத்தத்தில் இருந்து விடுவித்துக்கொள்கிற மாதிரி உணர்வோம்.

ADVERTISEMENT

உணவுக்கும் உளவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்படி  மன அழுத்தமாக  இருக்கும்போது எதையாவது சாப்பிடுவது, அதிக சர்க்கரை சேர்த்து காபி, டீ குடிப்பது போன்ற பழக்கமுள்ளவர்களுக்கு எளிதில் எடை கூடும்.

அடுத்த முறை இப்படிச் செய்யக்கூடாது என நினைத்தாலும் நம்மையும் அறியாமல் அடுத்த முறை  மன அழுத்தம் ஏற்படும்போதும் அப்படித்தான் சாப்பிடுவோம்

ADVERTISEMENT

இதைத் தடுக்க, வீட்டில் நொறுக்குத்தீனிகள், ரெடிமேடு உணவுகளை வாங்கி வைப்பதைத் தவிருங்கள். உணவைக் குறைப்பதால் உடல்நலம் கூடும் என்பதை உணருங்கள்.

மன அழுத்தம் இருப்பதாக உணர்ந்து, எதையாவது சாப்பிடத் தோன்றினால், முதல் வேலையாக குளிர்ந்த நீர் குடியுங்கள். சளி பிடிக்குமே, தொண்டைக் கரகரப்பு வருமே என்றெல்லாம் யோசிக்காமல் குடியுங்கள்.

ADVERTISEMENT

இரண்டாவது மூளை எனச் சொல்லக்கூடிய வயிற்றை இந்தக் குளிர்ந்த நீர் இதமாக்கும். அது பசியல்ல, மன அழுத்தத்தால் ஏற்படுகிற வயிற்றுச் சுருக்கம் என்பதை உணர்த்தும்.

எனவே, அடுத்தமுறை  மன அழுத்தம் ஏற்படும்போது இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.  மன அழுத்தத்தை உணரும்போது சாப்பிடுவது என்பது உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்கிற செயல் என்பதை மனதில் பதிய வையுங்கள்.

மன அழுத்தமாக இருக்கும்போது சாப்பிடுகிற இந்தப் பழக்கம் எந்த வகையிலும் உங்கள்  மன அழுத்தத்தைப்  போக்கப் போவதில்லை, மாறாக, உங்கள் உடல்நலத்தையே பாதிக்கப்போகிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

குளிர்ந்த நீர் அல்லது சாதாரண தண்ணீர் குடியுங்கள். சிறிது அவல் மெல்லலாம். இனிப்புள்ள உணவுகளைச் சாப்பிடாதீர்கள். அந்த உணவுகளுக்கு அடிக்ஷனை ஏற்படுத்தும் தன்மை உண்டு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முந்திரி சாக்கோ ரோல்

டிஜிட்டல் திண்ணை: பங்குபோடும் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன்… ஸ்டாலினை டென்ஷன் ஆக்கிய South

அரசுப் பணிக்குத் தயாராகிறீர்களா? : டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

இனிமே விஜய் இப்படித்தான்: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share