பியூட்டி டிப்ஸ்: முடி உதிர்வு… தீர்வு என்ன?

Published On:

| By Selvam

how to stop hair loss

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, ஆரோக்கியத்தின் அழகு கூந்தலிலும் தெரியும்”  என்கிறார்கள் கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர்கள்.

“ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு முடி உடையும். ஹார்மோன் பிரச்சினை உள்ளவர்களுக்கு உடலின் முடி அடர்த்தியாகவும், தலையின் முடி மெலிதாகவும் இருக்கும். இதுபோல் பலவித அறிகுறிகள் ஒவ்வொரு பிரச்சினைக்குப் பின்னாலும் இருக்கக்கூடும்” என்பவர்கள்  ‘முடி உதிர்வதில் எது நார்மல்… எது அப்நார்மல்?’ என்பதைப் பற்றியும் விளக்குகிறார்கள்.

“ஒரு நாளில் 50 முதல் 100 வரையிலும்கூட முடி உதிர்வு இருக்கலாம். குறிப்பாக, ஹார்மோன் பிரச்சினைகள் உண்டாகும்போது, அதிக காய்ச்சல், பிரசவம் போன்ற சூழ்நிலைகளில் முடி உதிர்வு தற்காலிகமானதாக இருக்கும். பின்பு சரியாகிவிடும்.

ஆனால், சாதாரணமாகவே நமக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் படுக்கையில், பாத்ரூமில், வேலை செய்து கொண்டிருக்கும் அலுவலக மேஜையில் என எல்லா இடங்களிலும் முடி தென்பட்டால் அது கவனத்துக்குரியது. இதேபோல் தலையில் அரிப்பு ஏற்படுவது, அதிக முடி வறட்சி போன்றவற்றை உணர்ந்தாலும் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

முடி என்பதே புரதம், அமினோ அமிலம் தான். எனவே, உங்கள் உணவில் புரதச்சத்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவுகளில் மட்டுமே புரதம் இருக்கிறது என்று அர்த்தமில்லை. பால், தயிர், முட்டை, வேர்க்கடலை, சோயா பீன், பாதாம் போன்றவற்றிலும் புரதம் உள்ளது. பாசிப்பயறு கூந்தலுக்கு மிகவும் நல்லது. இதுபோல் போதுமான புரதம் மட்டுமன்றி பழங்கள், காய்கறிகள் கொண்ட ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவதும் நல்ல பலன் தரும்.

முடி உதிர்வுக்கு மீசோதெரபி அளிப்பதா, லேசர் வேண்டுமா, பிளாஸ்மா சிகிச்சை தேவைப்படுமா, சப்ளிமென்ட்ஸ் கொடுக்கலாமா என்பதையெல்லாம் காரண காரியத்தை அறிந்து மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். இணைய தளத்தில் தெரிந்துகொண்டோ, யாரோ சொல்கிறார்கள் என்றோ மருத்துவரிடம் வற்புறுத்தக் கூடாது. அதே போல் கூந்தல் சிகிச்சையில் மருத்துவரின் முயற்சியோடு தனிநபரின் பங்களிப்பும் கட்டாயம்.

என்னதான் சிகிச்சை கொடுத்தாலும், முடியைப் பராமரிக்க நீங்கள் தினமும் என்ன முயற்சியை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதும் முக்கியம்” என்பவர்கள் அதற்கான வழிகாட்டுதலைப் பகிர்ந்தார்கள்…

உடலின் நீரேற்றத்துக்காக போதுமான தண்ணீர் குடியுங்கள். அதிக வெயில் கூந்தலை பாதிக்கும். முடி வறண்டு உடையலாம் அல்லது செம்பட்டை நிறத்துக்கு மாறலாம்.

தலையின் மண்டைப்பகுதியை (Scalp) வறண்டு போக விடக் கூடாது. எனவே, தேங்காய் எண்ணெய், சீரம், லோஷன் என உங்களின் தேவையறிந்து மருத்துவரின் ஆலோசனைப்படி தடவுங்கள்.

கோடைக்காலத்தில் நீச்சல் குளங்களுக்குச் செல்லும் பழக்கம் சிலருக்கு உண்டு. நீச்சல் குளத்தின் தண்ணீரில் குளோரின் சேர்ப்பார்கள் என்பதால் கவனம் அவசியம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆ.ராசா தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி செயலிழப்பு… திக் திக் 20 நிமிடங்கள்!

சம்மர் சீசனில் வெள்ள நிவாரணம்: அப்டேட் குமாரு

தர்மபுரி… வன்னியர் ஓட்டு யாருக்கு? தலித் ஓட்டு யாருக்கு? மற்றவர்களின் ஓட்டு யாருக்கு?  ரகசிய விவரம்!

“கேட்டதோ 37,907 கோடி, வந்ததோ 276 கோடி”: மத்திய அரசை சாடிய ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share