ஹாய், ஹலோ பழசு! டேட்டிங் ஆப்பில் நெஞ்சை அள்ளும் முதல் மெசேஜ் ரகசியங்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

டேட்டிங் ஆப்ஸ்களில் (Dating Apps) நமக்குப் பிடித்த ஒரு நபருடன் ‘மேட்ச்’ (Match) ஆன உடனே ஒருவித படபடப்பும் சந்தோஷமும் தொற்றிக் கொள்ளும். ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே, “முதல் மெசேஜ் என்ன அனுப்புறது?” என்ற மிகப்பெரிய குழப்பம் வந்துவிடும்.

பெரும்பாலானவர்கள் செய்யும் அதே வழக்கமான “ஹாய்”, “ஹலோ”, “சாப்டீங்களா?” போன்ற போரடிக்கும் மெசேஜ்களை அனுப்பினால், அவரிடமிருந்து பதில் வருவது மிகவும் கடினம். ஏனெனில், சுவாரசியமான தொடக்கம் மட்டுமே ஒரு உரையாடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். முதல் மெசேஜிலேயே மற்றவர்களைக் கவர்ந்து பேச்சைத் தொடங்குவதற்கான சில எளிய உத்திகள் இதோ!

ADVERTISEMENT

ப்ரொஃபைலை கவனித்துப் பேசுங்கள்

யாராக இருந்தாலும் தங்களைப் பற்றி மற்றவர்கள் உற்று கவனிப்பதை விரும்புவார்கள். எனவே, மொட்டையாகப் பேசத் தொடங்காமல் அவரது ப்ரொஃபைல் பயோ (Bio) அல்லது புகைப்படங்களை நன்றாகக் கவனியுங்கள்.

  • சுவாரசியமான விவரங்கள்: அவர் தனது புகைப்படத்தில் ஏதேனும் ஒரு வரலாற்று இடத்திற்குச் சென்றிருந்தாலோ அல்லது ஒரு செல்லப் பிராணியை வைத்திருந்தாலோ அதை வைத்துக் கேள்வியைக் கேளுங்கள்.
  • உதாரணமாக, “உங்க போட்டோல இருக்கற நாய் குட்டி ரொம்ப கியூட்டா இருக்கு, அது என்ன பிரீடு?” அல்லது “நீங்க போட்டோ எடுத்த அந்த இடம் செமயா இருக்கு, அது எங்கே இருக்கு?” என்று கேட்கலாம். இது நீங்கள் அவரது ப்ரொஃபைலை ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள் என்பதை அவருக்கு உணர்த்தும்.

ஓபன்-எண்டட் கேள்விகள் கேளுங்கள்

‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லும் கேள்விகளைத் தவிர்த்திடுங்கள். அதற்குப் பதிலாக அவர் சற்று யோசித்து விரிவாகப் பதில் சொல்லும் வகையான ஓபன்-எண்டட் (Open-ended) கேள்விகளைக் கேளுங்கள்.

ADVERTISEMENT
  • “உங்களுக்கு மியூசிக் பிடிக்குமா?” என்று கேட்பதற்குப் பதிலாக, “நீங்க லூப்ல கேக்குற தற்போதைய ஃபேவரிட் சாங் எது?” என்று கேட்கலாம்.
  • இத்தகைய கேள்விகள் அடுத்தடுத்துப் பேச்சை வளர்க்கப் பெரிதும் உதவும்.

‘இதுவா அதுவா’ ஐஸ்பிரேக்கர் உத்தி

உரையாடலின் ஆரம்பத்தில் இருக்கும் தயக்கத்தை உடைக்க (Icebreaker) இந்த ‘திஸ் ஆர் தட்’ (This or That) விளையாட்டு மிகச் சிறந்த வழியாகும். இது விளையாட்டுத் தனமாகவும் அதே நேரத்தில் அவரது ரசனையைத் தெரிந்துகொள்ளவும் உதவும்.

எளிய ஐஸ்பிரேக்கர் உதாரணம்:ஃபில்டர் காபியா இல்ல கோல்ட் காபியா? எதை வச்சு நம்ம பேச்சைத் தொடங்கலாம்?” அல்லது “வெள்ளிக்கிழமை நைட் பார்ட்டியா இல்ல நெட்பிளிக்ஸ்ல படமா? உங்களோட சாய்ஸ் எது?” என்று ஜாலியாகக் கேட்கலாம். இதற்குப் பெரும்பாலானவர்கள் உடனடியாகப் பதில் அளிப்பார்கள்.

ADVERTISEMENT

நகைச்சுவையும் எளிய பாராட்டும்

ஒருவரது உடையையோ அல்லது அழகையோ “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்று சாதாரணமாகப் பாராட்டுவதை விட, அவரது ரசனையைப் பாராட்டுங்கள். “உங்களோட பயோ (Bio) ரொம்ப கிரியேட்டிவ்வா இருக்கு”, அல்லது “உங்களோட டிரஸ்ஸிங் சென்ஸ் செம மாஸ்” என்று பாராட்டலாம்.

அதேபோல, உங்களது பேச்சில் லேசான நகைச்சுவை உணர்வு (Humor) கலந்திருப்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட். மொட்டையான மொக்க ஜோக்குகளைத் தவிர்த்து, நாகரிகமான டைமிங் நகைச்சுவையைப் பயன்படுத்துங்கள்.

மனதில் நிறுத்த வேண்டிய பொன்னான விதி: முதல் மெசேஜ் அனுப்பிய உடனே அவர் பதில் சொல்ல வேண்டும் என்று ஆன்லைனிலேயே காத்துக் கிடக்காதீர்கள். அதேபோல, அவரிடமிருந்து பதில் வரவில்லை என்றால் அடுத்தடுத்து மெசேஜ்களை அனுப்பிப் பாராட்டைத் தேடாதீர்கள் (No double texting). உங்களது சுயமரியாதையைக் காத்து, இயல்பாகவும் நிதானமாகவும் உரையாடலைக் கையாளுங்கள்!

நன்றி: ஸ்ரீவித்யா மாரியப்பன், எழுத்தாளர் மற்றும் தொடர்பாடல் நிபுணர்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share