வேலை, வேலை என்று நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பவரா நீங்கள்… உங்கள் வாழ்க்கைக்கு வொர்க்-லைஃப் பேலன்ஸ் அவசியம் என்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள்.
வொர்க்-லைஃப் பேலன்ஸ் எனப்படும் வேலை-வாழ்க்கை சமநிலை என்பது உங்கள் வேலை, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உங்களை மேம்படுத்தும் விஷயங்களைச் சரியாக நிர்வகிப்பதற்கான ஒரு வழி. வொர்க் -லைஃப் பேலன்ஸ் சரியாக இருப்பவர், வேலையிலும் மகிழ்ச்சியாக இருப்பார்… குடும்பத்துக்கும் போதுமான நேரத்தை ஒதுக்குவார்.
செல்போன் இயங்க சார்ஜ் எவ்வளவு அவசியமோ, அதே மாதிரி மனித மூளைக்கும் அவ்வப்போது சார்ஜ் ஏற்ற வேண்டும். பிடித்த வேலையைச் செய்வதானாலும் அதற்கும் ஓர் எல்லை உண்டு. பிடித்த வேலையாக இருந்தாலும் ஓய்வின்றி, மற்ற விஷயங்களுக்கு நேரம் ஒதுக்காமல் இருப்பதால், உடல் மற்றும் மனநலம் நிச்சயம் பாதிக்கப்படும்.
வொர்க்-லைஃப் பேலன்ஸ் பாதிக்கப்படும்போது, முதலில் மனச்சோர்வு ஆரம்பமாகும். அது மறைமுகமாக உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும். தூக்கமின்மை, சரியாகச் சாப்பிட முடியாதது, பதற்றம் போன்றவற்றை எதிர்கொள்வார்கள்.
இந்த நிலையில் அலுவலக வேலை அல்லாத நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம்.
பணி முடித்து வெளியே வரும்போது அதுகுறித்த சிந்தனை தேவையில்லை. தனிப்பட்ட நலன்கள், பொழுதுபோக்கு இவற்றுக்கென சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.
மனத்தளவில் சோர்வாக உணரும்போது, உங்களுக்குப் பிடித்த விஷயங்கள், பிடித்த நபர்கள், பிடித்த இடங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். வேலையிலிருந்து விலகி, அவ்வப்போது சிறு பயணம் மேற்கொள்ளலாம்.
வேலை, வேலை என்று நீங்கள் உங்கள் இளமைக்காலம் முழுவதும் ஓடிக்கொண்டே இருந்தால் குறிப்பிட்ட வயதைத் தாண்டும் போது உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால்… செய்யாமல் விட்ட விஷயங்களை நினைத்து நிச்சயம் வருத்தப்படுவீர்கள்.
சம்பாதித்தால் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என நீங்கள் நினைத்தது அப்படியே பொய்யாகிப் போயிருக்கும். எனவே, வாழ்க்கையில் வேலையும் முக்கியம், அதே போல மற்ற விஷயங்களும் முக்கியம் என்பதை எப்போதும் மறக்காதீர்கள்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : பொங்கல் பரிசு வழங்கும் ஸ்டாலின் முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை வரை!
கிச்சன் கீர்த்தனா : பெஸ்டோ – பனீர் பொங்கல்
பாஜகவில் பதவிச் சண்டை… ஏழு மணி நேர பஞ்சாயத்து!
மாப்ள இவரு தான் ஆனா… அப்டேட் குமாரு
அப்படி என்ன இருக்கு புதன் கிழமையில? டெல்லி தேர்தல் தேதியில் இப்படி ஒரு விசேஷம்!