பியூட்டி டிப்ஸ்: ஆடைகளுக்கு ஏற்ற காலணியைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம்!

Published On:

| By christopher

How to Select Shoes to Wear with an Outfit

“காலுக்கு அணியும் காலணியில் என்ன உள்ளது? அதையெல்லாம் யார் கவனிக்கப்போகிறார்கள்?” என்று அலட்சியமாக இருப்பவரா நீங்கள்?

முழுமையான, ஸ்மார்ட்  அவுட் பிட் என்பது வெறும் உடை, அணிகலன்கள், ஹேர் ஸ்டைல்ஸில் மட்டும் அடங்காது. நாம் அணியும் காலணியும் சேர்த்தால்தான் முழுமையடையும்.

மேலும், நமது நடையின் மூலம் தன்னம்பிக்கையை வெளிபடுத்த விதவிதமான ஷுக்களை அணிவது அவசியம். எந்த ஆடைக்கு எந்த வகையான காலணியைத் தேர்ந்தெடுப்பது?

Ballet flats

இது கட் ஷு போன்று விரல்கள் அனைத்தையும் மறைத்திருக்கும். பொதுவாக தொடை வரை அணியும் ஷார்ட் ஸ்கர்ட் உடையுடன் இதை அணிந்தால் அழகாக இருக்கும். இந்த ஸ்டைலை பிரெஞ்சு ஸ்டைல் என்றும் கூறுவார்கள். இது இப்போது, நம் நாட்டிலும் டிரெண்டாகி கொண்டு வருகிறது.

Open toe kitten heel

இது உடம்போடு ஒட்டி, முட்டி பகுதிக்கு கீழ் வரை இருக்கும் ஆடைகளுக்கு நன்றாக பொருந்தும். Open toe kitten heel என்பது நாம் ரஃபாக பயன்படுத்தும் சாதாரண மாடல் போன்றுதான் இருக்கும். முதல் இரு கால் விரல்களுக்கும் இடையில் மெலிதான பிடிமானத்துடன், தரையோடு நன்கு ஒட்டி, பின் பக்கம் மட்டும் ஹீலுடன் இருக்கும்.

Strappy block heel

இந்த வகையான ஹீல் தரையோடு ஒட்டி இல்லாமல் உயரமாக இருக்கும். மேலும், இதனுடன் இணைந்த வார் சிறிது மேல் சென்று இணைவதுபோல் இருக்கும். இந்த வகையான ஹீலை முழு நீள ஸ்கர்ட் மாடலுக்கு பயன்படுத்துவது ஒரு கம்பிரமான உணர்வை கொடுக்கும்.

Open toe heeled sandals

இந்த வகையான ஹீல் உடம்போடு ஒட்டி இருக்கும் ஆடைகளுக்கு மிக ஏற்றவையாக இருக்கும். இந்த ஹை ஹீலில் மெலிதான வார் கொண்டு ஐந்து விரல்களையும் ஒன்றாகச் சேர்த்து, பின் கால் மடங்கும் இடத்தில் அந்த வார் இணைந்திருக்கும். மேலும், இது காலை நீளமாகவும், உயரமாகவும், மிக அழகாகவும் எடுத்துக்காட்டும்.

Cowboy boots, sneakers or loafers

ஜீன்ஸ் மற்றும் தொடை வரை இருக்கும் மேலாடை அணியும்போது இந்த வகையான காலணிகள் பயன்படுத்தினால், ஒரு ஸ்டைலிஷ் லுக் கொடுக்கும். மேலும், ஸ்கின்னி ஜீன்ஸ், லெகின்ஸ், ஜெகின்ஸ் ஆகிய ஆடைகளை உடுத்தும்போதும் இதுபோன்ற காலணிகள் பயன்படுத்துவது பேஷன்.

Combat boots

இதை டி ஷர்ட், ஹுடி போன்ற ஆடைகளுடன் அணிந்தால் மாஸாண லூக்கைத் தரும். மேலும் Party, Friends out, Family out, Weekend, trips போன்ற அனைத்திற்கும் ஏற்றவையாக இருக்கும்.

Loafer Select Shoes

வெயில் காலங்களில் உடுத்திக்கொள்ளும் சம்மர் ஆடைகள் மற்றும் குட்டையான பேபி டால் ஆடைகளுடன் இந்த Loafer மாடல் காலணி அணிந்தால் எளிதான மற்றும் அழகான லூக்கை கொடுக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: அரிசி அப்பம்

கோவம் வந்தா குணம் போய்டுதே : அப்டேட் குமாரு

GOAT பர்ஸ்ட் ‘சிங்கிள்’ மற்றும் ‘ரிலீஸ்’ தேதி இதுதான்!

பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கேற்ற வளையல் எது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share