பியூட்டி டிப்ஸ் : மூக்கின் மேல் வரும் கரும்புள்ளிகளை நீக்க என்ன செய்வது?

Published On:

| By Kavi

How to remove dark spots on nose?

மூக்கின் மேல்  வரும் கரும்புள்ளிகள் முக அழகையே கெடுத்துவிடும். இதனால் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கோ, விழாக்களுக்கோ செல்லும் போது கரும்புள்ளிகளை மறைக்க சிரமப்படுவோம்.

இதை எளிதாக நீக்குவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.

ஒரு டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து  கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை செய்து காலையில் நீரில் கழுவி வர கருப்பு புள்ளிகள் நீங்கும்.

கிரீன் டீ இலையை நீரில் கலந்து கரும்புள்ளி உள்ள இடத்தில் ஸ்க்ரப் செய்து வந்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் உப்பை நீரில் கலந்து நன்கு கரைந்த பின், தேன் கடலை மாவு சேர்த்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவலாம்.

முல்தானி மெட்டியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து மூக்கின் மேல் தடவி உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.

ஓட்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை பேஸ்ட் போல் கலந்து ஸ்க்ரப் செய்து வந்தாலும் கரும்புள்ளிகள் நீங்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: பாஜகவோடு கூட்டணியா?  கள ஆய்வுக் கூட்டத்தில் எடப்பாடி சொன்ன டு இன் ஒன் பதில்!

துணை முதல்வர் உதயநிதியின் துணை செயலாளராக ஆர்த்தி நியமனம்!

பியூட்டி டிப்ஸ்: திடீர் மச்சம்… அழகா, ஆபத்தா?

விரைவு விசாவை நிறுத்திய கனடா அரசு: பாதிக்கப்படும் இந்திய மாணவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share