பியூட்டி டிப்ஸ்: மாறாமல் இருக்கும் அம்மைத் தழும்புகள்… நீக்க முடியுமா?

Published On:

| By christopher

How to Remove Chickenpox Scars?

நம்மில் சிலருக்கு சிறு வயதில் அம்மை வந்ததால் ஏற்பட்ட தழும்புகளும், வடுக்களும் முகம் முழுவதும் மறையாமல் இருக்கும். இந்த முகத் தழும்புகளை நிரந்தரமாகப் போக்க ஏதேனும் சிகிச்சைகள் உள்ளனவா? சருமநல மருத்துவர்கள் சொல்லும் பதில் என்ன?

“சிறுவயதில் அம்மை வந்ததால் ஏற்பட்ட தழும்புகள் என்பவை பழைய வடுக்கள். அடிபட்டதாலோ, வேறு காரணங்களாலோ சமீபத்தில் வந்தவையல்ல. அம்மை வடுக்கள் சருமத்தின் ஆழத்தில் உள்ள லேயர்வரை பாதித்திருக்கும்.

இத்தகைய ஆழமான, பழைய வடுக்களையும் தழும்புகளையும் வெறும் க்ரீமை மேல்பூச்சாகப் பயன்படுத்தி ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ மாற்றுவது சாத்தியமில்லை. அது பலவித சிகிச்சைகளை உள்ளடக்கி அணுகப்பட வேண்டியது. அதாவது, மேல்பூச்சுக்கு க்ரீமும் உபயோகிக்க வேண்டியிருக்கும். லேசர் அல்லது மைக்ரோ நீட்லிங் அல்லது ஃபில்லர்ஸ் போன்ற சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். தழும்பின் ஆழத்தின் தன்மையைப் பார்த்துதான் அதை முடிவுசெய்ய முடியும்.

ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் பிரச்னை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்தே சிகிச்சையைத் தீர்மானிக்க முடியும். சிறு வயதில் அம்மையால் ஏற்பட்ட தழும்பு என்பதால், தழும்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மைக்ரோ நீட்லிங் அல்லது ஃபில்லர்ஸ் சிகிச்சை செய்யலாம். தழும்புகள் வந்த சருமத்தை முழுவதுமாக பழைய நிலைக்கு மாற்ற முடியுமா என்றால் முடியாது. தழும்புகளின் ஆழத்தைப் பொறுத்து 60 முதல் 70 சதவிகிதம் வரை மாற்றத்தை எதிர்பார்க்கலாம். ரொம்பவும் ஆழமான தழும்புகள் என்றால் 40 சதவிகித மாற்றத்தை எதிர்பார்க்கலாம்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: நெல்லையில் எடப்பாடி முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை பைனல் வரை!

கிச்சன் கீர்த்தனா… சண்டே ஸ்பெஷல்: பாக்கெட் பொருட்கள் வாங்குபவரா நீங்கள்.. ஒரு நிமிஷம்!

டிஜிட்டல் திண்ணை: மூட்டை கட்டும் ஆர்.என்.ரவி… புதிய ஆளுநர் வி.கே.சிங்?  ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!

தமிழ்த்தாய் வாழ்த்து… ஆளுநருக்கு எதிராக திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!

சு.வெங்கடேசன் பேச்சும்… மூர்த்தி பதிலும்: என்ன நடக்கிறது மதுரை திமுக கூட்டணியில்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share