ஹெல்த் டிப்ஸ்: தினம் தினம் உடல் வலி… மீள என்ன வழி?

Published On:

| By Kavi

How to relieve from daily body pain

‘உடலில் ஒவ்வோர் உறுப்பாக வலிக்கிறது. தினமும் ஏதோ ஒரு வலியை உணர்கிறேன். வலி நிவாரணி மாத்திரைகளை உபயோகித்துப் பார்த்துவிட்டேன், பலனில்லை. வலியிலிருந்து மீள ஏதேனும் வழி உண்டா’ என்று அவதிப்படுபவர்கள் இன்றைக்கு அதிகரித்து வருகிறார்கள். இந்த பிரச்சினைக்குபுனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர்கள் சொல்லும் தீர்வு இதோ…

“இதை தசைநார் அழற்சி வலி என்போம். இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுவோரில் 90 சதவிகிதம் பேர் பெண்கள் மற்றும் 50 ப்ளஸ் ஆண்கள். இவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் என எல்லாமே நார்மலாக இருக்கும். ஆனால், வலி மட்டும் தொடரும். அதனால் இது பலராலும் பெரும்பாலும் மனநோயாகவே பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

நவீன வலி நிர்வாக மருத்துவத் துறையில்  இதற்கான தீர்வு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயபரிசோதனை கேள்வித்தாள் ஒன்று வழங்கப்படும். அதில் அவர்கள் தங்களின் வலிகளையும் அறிகுறிகளையும் எழுதுவார்கள். அவர்கள் தந்திருக்கும் பதிலை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்வார்கள். அதன் முடிவில்தான், அந்தப் பிரச்சினையின் பின்னணியில் அவர்களது மூளை செல்களின் வலி தாங்கும் சக்திக்கான ஒரு பகுதியில் செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பது கண்டறியப்படும்.

இந்தப் பிரச்சினைக்கு குறைந்தது நான்கு முதல் ஆறு வார கால சிகிச்சை தேவைப்படும். இதற்கு வலி நிவாரண மருத்துவர்கள் மற்றும் புனர்வாழ்வு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டியது முக்கியம். பாதிக்கப்பட்ட நபரின் அவதிகளை குடும்பத்தாரும் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும்.

ADVERTISEMENT

மருத்துவரின் அறிவுரைகளை, சிகிச்சைகளை தொடர்ந்து பின்பற்றுங்கள். நிச்சயம் வலியிலிருந்து தீர்வு கிடைக்கும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் முரப்பா !

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்: பல்கலைக்கழகத்தால் பிரிந்த மோகன் பாபு குடும்பம்!

“பாரதியின் கனவு இன்று நனவாகியுள்ளது” : மோடி பேச்சு!

ஊழல் குற்றச்சாட்டு : அமெரிக்க நிதியை நிராகரித்த அதானி

‘ தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க’… நினைவிருக்கிறதா?- நிஜத்தில் நடத்திய மோகன் பாபு

பொது இடங்களில் செல்போனுக்கு சார்ஜ்: எச்சரிக்கும் ஆர்பிஐ! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share