சமையலில் உப்பு அதிகமாகிடுச்சா? இதச் செஞ்சா போதும்.. உடனே சரியாகிடும்!

Published On:

| By Santhosh Raj Saravanan

சமையலில் உப்பு அதிகமாகிவிட்டால் அதனை குறைக்கும் வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.

நமது உடலின் ஆரோக்கியத்திற்கு உப்பு இன்றி அமையாததுதான். ஆனால், அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்தால் அது நமக்கு ஆபத்தாக மாறிவிடும். ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்டவை ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக அதிகளவு உப்பு நுகர்வு இருந்து வருகிறது. இதுஒருபக்கம் இருக்கட்டும் நாம் விஷயத்திற்கு வருவோம்.

ADVERTISEMENT

பொதுவாக சமைக்கும்போது சில நேரம் உப்பு அதிகமாக சேர்த்திருப்போம். முன்பு சேர்த்ததை மறந்து கூட பிறகும் கூடுதலாக சேர்த்திருப்போம். இந்த நேரத்தில் என்ன செய்தாவது உப்பு சுவையை குறைக்க பல்வேறு முயற்சிகளை செய்வோம். இங்கு குழம்பில் அதிகரித்த உப்பின் சுவையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து சில டிஸ்ப்களைப் பார்க்கலாம்.

தண்ணீரை கூடுதலாக சேர்க்கலாம்

ADVERTISEMENT

குழம்பில் அதிக தண்ணீரை கலப்பது உப்பைக் குறைப்பதற்கான எளிதான வழிகளில் ஒன்று. குழம்பும், கறிகள் சமையல், சூப்கள், சாஸில் கூடுதல் உப்பைக் குறைக்க சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கலாம். இது உணவின் கெட்டித்தன்மையை அப்படியே வைத்திருக்கும் அதே வேளையில் உப்பை நீர்த்துப்போகச் செய்ய உதவுகிறது.

குழம்பில் அதிகமான பொருட்களைச் சேர்ப்பது

ADVERTISEMENT

குழம்பில் கூடுதல் பொருட்களை சேர்ப்பதன் மூலம் உணவில் உப்பின் அளவை சமன்படுத்த உதவுகிறது. கிரேவி, சூப், காய்கறிகள் மற்றும் குழம்புகளில் கூடுதல் காய்கறிகள், இறைச்சி அல்லது பீன்ஸ் ஆகியவற்றைச் சேர்க்கலாம். சாஸ்களுக்கு இன்னும் கொஞ்சம் பூண்டு, தக்காளி அல்லது வெங்காயத்தைச் சேர்ப்பது உப்பு சுவையைக் குறைக்க உதவும்.

எலுமிச்சை சாறு

உப்பு சுவையை குறைக்க எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம். உப்பு அதிகமான உணவு பொருட்களில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் உப்பு சுவை குறையும். எலுமிச்சையில் உள்ள அமிலங்கள் உப்பு சுவையை நடுநிலையாக்கும்

தயிர்

உப்பு அதிகமான உணவில் தயிர் சேர்த்தால் உப்புச் சுவையை சற்று குறைக்க முடியும் என கூறுகிறார். தயிரில் உள்ள கிரீமி டேன்ஜினஸ் உப்புத்தன்மையை கட்டுப்படுத்தவும், நீர்த்துப்போகவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உருளைக்கிழங்கு மட்டும் வேண்டாம்

உப்பு அதிகமான உணவுகளில் உருளைக்கிழங்கு சேர்த்தால் உப்புச் சுவை கட்டுப்படும் குறையும் என்பது ஒரு கட்டுக்கதையாகும். உருளைக்கிழங்கு சேர்த்தாலும் அதிலிருக்கும் உப்பு குறைய வாய்ப்பில்லை என்பதே உண்மை. ஆகவே, உப்பு சுவையை குறைக்க உருளைக் கிழங்கை பயன்படுத்த வேண்டாம்.

அதே சமயம் உப்பு போடுவதற்கு முன் ஒரு முறை சரி பார்த்து விட்டு பயன்படுத்தினால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இனி உங்கள் சமையலில் உப்பு அதிகமானால் இந்த வழிகளை பின்பற்றி பாருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share