இரவில் தூங்குவதற்கு முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?

Published On:

| By Kavi

how to protect your hair before bed time

பெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும் போது சரியான பராமரிப்பு இல்லாததே முக்கிய காரணமாகும்.

படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்? வாங்க பார்க்கலாம்

தினமும் படுக்கும் முன் 10 முதல் 15 நிமிடம் கூந்தலை சீவி கொள்ளவேண்டும். அதுவும் சீவும் போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும்.

how to protect your hair before bed time

அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும்.

தினமும் படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள்.

இதேபோல் மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். அதனுடன் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய்து கூந்தலில் தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம்.

how to protect your hair before bed time

கூந்தல் நன்கு வளர வேண்டுமென்றால், படுக்கும் முன் கூந்தலை நன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வேண்டும்.

நீண்ட கூந்தலை உடையவர்கள் கூந்தலின் முனையை மறக்காமல் துணியால் சுற்றிக் கொண்டு படுக்கலாம்.

அவ்வாறு செய்வதால் கூந்தலின் முனைகள் சிக்கு அடையாமல், முடிச்சுகள் எதுவும் வராமல் இருக்கும். மேலும் கூந்தலின் முனைகள் வெடிக்காமலும் இருக்கும்.

இவ்வாறெல்லாம் கூந்தலை இரவில் பராமரித்து பாருங்கள், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதோடு, கூந்தல் உதிர்வதும் நிற்கும்.

சுபஸ்ரீ

வேலைவாய்ப்பு: மதுரை காமராஜ் பல்கலையில் பணி!

ரூ.2000 நோட்டுகளை வாங்க கூடாது: நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share