ஹெல்த் டிப்ஸ்: குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமலைத் தடுக்க உதவும் சிம்பிள் வைத்தியம்!

Published On:

| By Selvam

cold cough in winter season

ஜலதோஷம் மற்றும் இருமல் போன்றவை குளிர்காலத்தில் அதிகம் நம்மைப் பாதிக்கும் விஷயம். அதனை எதிர்கொள்ளும் வகையில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இந்த வீட்டு வைத்தியங்கள்…

சைனஸ், நுரையீரல் ஒவ்வாமை இருப்பவர்கள் குளிர்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள வாரத்தில் இரண்டு நாட்கள் ஆவி பிடிக்க வேண்டும். குறைந்தது 5 நிமிடங்கள் எடுத்துக்கொண்டால் போதுமானது.

ஒரு வாயகன்றப் பாத்திரத்தில் தண்ணீருடன் மஞ்சள், நொச்சி, கற்பூரவள்ளி, துளசி போன்றவற்றை போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் நல்லது.

இதில் ஒரு சில பொருட்கள் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் வெறும் வெந்நீரில் மட்டும் ஆவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.

ஆவி பிடிப்பதால் கபம் சார்ந்தப் பிரச்சினைகளாக இருந்தால் நிவாரணம் கிடைக்கும்.

குளிர்காலங்களில் தூதுவளைத் துவையல், கற்பூரவல்லி இலைகளைப் பயன்படுத்தி பஜ்ஜி செய்து சாப்பிடலாம். கொள்ளு ரசம், மிளகு ரசம் அடிக்கடி வைத்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக இஞ்சி சட்னி, இஞ்சி துவையல் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். காபி, டீக்குப் பதிலாக சுக்கு காபி, இஞ்சி காபி போன்றவற்றை அருந்துவது சிறந்தது.

குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, ஏனெனில் பலர் போதுமான தண்ணீரை உட்கொள்வதில்லை, இது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.

பல்வேறு நீராகாரங்களைக் குடிப்பது, குறிப்பாக தண்ணீர், நமது உடல் பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, இது நமது உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, சுத்தமாக வைத்திருக்கிறது. வெதுவெதுப்பான தண்ணீரைத் தவிர, காய்கறி சூப்களும் செய்து அருந்தலாம்.

குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுப்பதில் இஞ்சி, மிளகு போன்ற சமையல் பொருட்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

“பொதுவாக ஓருவர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவராக இருந்தால், இஞ்சி மற்றும் துளசி நீர் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நாள் முழுவதும் அவரை சுறுசுறுப்பாக வைத்திருக்க பெரிதும் உதவும்.

சளி மற்றும் இருமலுக்கான சிறந்த மருந்துகளில் ஒன்று மஞ்சள். இதனை கொதிக்கவைத்த பால் அல்லது தண்ணீரில் கலந்து அருந்துவது சிறந்தது. இது ஒரு ஆண்டிபயாடிக் ஆக செயல்படுவதன் மூலம் பல நோய்களைத் தடுக்கிறது.

குளிர் காலங்களில் சூடான பானங்களை குடிப்பது உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்த உதவுகிறது.

கிரீன் டீ மற்றும் காய்கறி சூப்கள் அடிக்கடி அருந்துவது நம்மை புத்துணர்ச்சியாக்கி குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: வீட்டிலேயே செய்யலாம் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்!

டாப் 10 நியூஸ்: குடியரசு தலைவர் தமிழகம் வருகை முதல் உதயநிதி பிறந்தநாள் வரை!

எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 100% வரி ரத்து: எங்கே தெரியுமா?

பான் கார்டு 2.0 : எப்படி, எப்போது பெறுவது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share