மழைக்காலம் வந்துவிட்டாலே சேற்றுப்புண் பிரச்சினையும் சேர்ந்துகொள்ளும். இந்தப் பிரச்சினைகளுக்கு என்ன காரணம்… இவற்றிலிருந்து விடுபட என்ன வழி? சருமநல மருத்துவர்களின் விளக்கம் இதோ…
“சேற்றுப்புண் பிரச்னை என்பது ஒருவகையான பூஞ்சைத் தொற்றால் ஏற்படுவது. விரல் இடுக்குகளில் ஈரப்பதம் இருந்துகொண்டே இருப்பதால் இந்தப் பூஞ்சைத் தொற்று பாதிக்கலாம்.
குளித்து முடித்ததும் கால்களை ஈரம்போகத் துடைக்க வேண்டும். குறிப்பாக, விரல் இடுக்குகளை நன்றாகத் துடைத்துவிட வேண்டும். அந்தப் பகுதியை உலர விட வேண்டும். சிலர் குளித்துவிட்டு வந்ததும் குளிர் தாங்க முடியாமல் கால்களுக்கு சாக்ஸ் அணிந்து கொள்வார்கள். இன்னும் சிலர் நீண்ட நேரம் சாக்ஸ் அணிந்தபடியே இருப்பார்கள். அதனால் அந்த இடங்களில் ஈரப்பதம் இருப்பதால் பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இந்தப் பிரச்னை மழை, குளிர் காலங்களில் மட்டுமன்றி, வெயில் காலத்திலும்கூட வரும். அதனால்தான் அந்தப் பகுதியை ஈரமின்றி உலர்வாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. வராமல் தடுப்பது புத்திசாலித்தனம். ஒருவேளை வந்துவிட்டால், மருத்துவரை அணுகி, ஆன்டிஃபங்கல் சிகிச்சை எடுப்பதுதான் ஒரே வழி” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : மூங்கில் அரிசி வேர்க்கடலை லட்டு
’வேட்டையன்’ : ரூ.200 கோடி கிளப்பில் இணைந்தது!