ஹெல்த் டிப்ஸ்: `டீஹைட்ரேஷன்’… தற்காத்துக்கொள்வது எப்படி?

Published On:

| By Selvam

உடலில் நீர்ச்சத்து குறைந்து, உடல் வறட்சியாவதை `டீஹைட்ரேஷன்’ என்பார்கள். கோடையில் அனைவரையும் பாதிக்கும் இதற்கு உடனடி சிகிச்சை தேவை. இல்லையென்றால், பாதிக்கப்பட்டவர் அடுத்த சில மணி நேரத்தில் சுயநினைவை இழக்க நேரிடும். இந்த டீஹைட்ரேஷன் பாதிப்பிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள எளிய வழிமுறைகள் இதோ…

வெயில் உச்சத்திலிருக்கும் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

நீர்ச்சத்தைப் பெற தண்ணீர் குடிப்பது மட்டும் போதாது. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் அவற்றின் சாறுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அன்றாட உணவை ஐந்து வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடலாம்.

ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது, பின்னர் பல மணி நேரத்துக்கு அருந்தாமலே இருப்பது என்றில்லாமல், அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பும்போது கையோடு, பையோடு வாட்டர் பாட்டில் எடுத்துச் செல்வது அவசியம்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புராஸ்டேட் கோளாறு இருப்பவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்தப் பிரச்சினைகள் உள்ளவர்கள் எந்தச் சூழலிலும் மருந்து, மாத்திரைகளைத் தவிர்க்கக் கூடாது.

அதிக வியர்வை வெளியேறும் எந்த வேலையையும் செய்ய வேண்டாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’யாருகிட்ட என்ன கேக்குறீங்க ஆபிசர்?’ : அப்டேட் குமாரு

கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் மோர் வற்றல்

பணத்துக்காக வீதிக்கு வீதி பார்… பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடத்திய கொடூரங்கள்!

மகளிர் தினம் : 2024ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது யாருக்கு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share