ஃபுட் பாய்சன்’ என்கிற வார்த்தையை சமீப காலங்களில் அடிக்கடி கேள்விப்படுகிறோம். `சாப்பிட்டது ஏத்துக்கலை போல…’ என ஒற்றைவரிக் காரணத்தையும் கூடவே வைத்திருக்கிறோம்.
வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுவலி, காய்ச்சல் என ஃபுட் பாய்சனிங்கின் அறிகுறிகள் பாடாகப்படுத்தும். சிலர், சுய வைத்தியம் என்ற பெயரில் சோடாவைக் குடிப்பது, ஆன்டாசிட் மருந்து சாப்பிடுவது என்றிருப்பார்கள்.
இந்த நிலையில், “ஃபுட் பாய்சனிங்கை ஏற்படுத்தும் காரணங்களைத் தெரிந்து அவற்றைத் தவிர்ப்பதே ஆரோக்கியத்துக்கு அடிப்படை” என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
மேலும், “சமைக்காத உணவுகளிலும் அரைகுறையாகச் சமைக்கப்பட்ட உணவுகளிலும் கிருமிகளின் தாக்கம் அதிகமிருக்கலாம். அவை ஃபுட் பாய்சனுக்குக் காரணமாகலாம்.
எனவே, அப்படிப்பட்ட உணவுகளைத் தவிருங்கள். சில வகை கிருமிகள், அறை வெப்பநிலையிலேயே எளிதில் பல்கிப் பெருகக்கூடியவை. எனவே, சமையலறை என்பது அதிகபட்ச சுகாதாரத்துடன் இருக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு முன் நீண்ட நேரம் உணவை வெளியிலேயே வைத்திருக்காதீர்கள். காய்கறிகளையும் பழங்களையும் கழுவிய பிறகு தோல் நீக்குங்கள், நறுக்குங்கள். தோல்நீக்கி, நறுக்கிய பிறகு கழுவிச் சமைக்காதீர்கள். சமைப்பவருக்குக் கை சுகாதாரம் மிக முக்கியம். உணவுப்பொருள்களைக் கையாளும்போது அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்.
ஃபுட் பாய்சன் ஏற்பட்டால் இளநீர், நீர்மோர், வீட்டில் தயாரித்த ஃப்ரெஷ் ஜூஸ், வெதுவெதுப்பான நீர், பெப்பர்மின்ட் டீ, இஞ்சி சேர்த்த வெந்நீர் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
உணவுகள் அதிக காரம், மசாலா இல்லாமலும்… எளிதில் செரிமானமாகும்படியும் பார்த்துக்கொள்ளுங்கள். வயிற்றுப்போக்கு இருந்தால், உடலில் நீரிழப்பு ஏற்படாமலிருக்க ஓ.ஆர்.எஸ் கரைசல், இளநீர், ஜூஸ் போன்றவற்றைக் குடிக்கவும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ட்ராபிக்கல் பொங்கல்!
திபெத்தை அடுத்தடுத்து தாக்கும் நிலநடுக்கம்… பயத்தில் நேபாளம்!
ஸ்தம்பித்த திருச்சி-மதுரை ஹைவே… தானா சேர்ந்த பிரம்மாண்டக் கூட்டம்… எதற்காக?
39 ஆண்டுகளாக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி… டாடா கொடுத்த ‘பஞ்ச்’