சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் தேவையான அளவுக்குச் சுரக்கப்படாதபோது சருமம் வறட்சியடைகிறது. சிலர் மரபுரீதியாக வறண்ட சருமத்தைப் பெற்றிருப்பார்கள். குளிப்பதற்கு எப்போதும் வெந்நீர் பயன்படுத்துபவர்களுக்கும் சருமம் வறட்சியடையும்.
சோப்பு போட்டு அடிக்கடி முகத்தைக் கழுவிக்கொண்டே இருந்தாலும், சருமத்தில் உள்ள எண்ணெய் மூலக்கூறுகள் எல்லாம் வெளியேறி சருமம் வறண்டுவிடும். காலநிலை மாற்றமும் சருமம் வறட்சியடைய முக்கிய காரணம். தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.
சருமம் வறட்சியடைவதைத் தடுக்க வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும். அதேபோல், குளிக்கிறேன் என்ற பெயரில் அரைமணி நேரத்துக்கு மேல் தண்ணீரிலேயே நின்று கொண்டிருக்கக் கூடாது. அதுவும் சருமத்தின் எண்ணெய்ப் பசையை நீக்கக்கூடும்.
குளித்து முடித்த மூன்று நிமிடங்களிலேயே சருமத்தில் மாய்ஸ்ச்சரைசர் க்ரீம் தேய்த்துக் கொள்வது நல்லது. இது சருமத்தில் இருக்கும் நீர் மூலக்கூறுகள் ஆவியாகாமல் தடுக்கும்.
உங்கள் சருமம் அதிகமாக வறட்சியடைந்திருக்கும்பட்சத்தில் குளிப்பதற்கு முன்பு உடலில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெய் அதற்கு சிறந்த பரிந்துரை. தண்ணீர் நிறைய அருந்துங்கள். சிலர் எண்ணெய் உணவுகளை முழுவதுமாகத் தவிர்ப்பார்கள். இதன் காரணமாகவும் சருமம் வறண்டு போகலாம்.
உடலுக்கு எண்ணெய்ச் சத்தும் அவசியம் என்பதால் குறைந்த அளவு எண்ணெயை அல்லது நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சாறு நிறைந்த பழங்களை அதிகமாகச் சாப்பிடலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: கழுத்துவலியால் அவதிப்படுபவரா நீங்கள்? காரணமும் தீர்வும்…
கிச்சன் கீர்த்தனா : டேட்ஸ் எள்ளு உருண்டை
பியூட்டி டிப்ஸ்: டீன் ஏஜ் பருவத்தினரே… உங்களை அழகாக்கும் விஷயங்கள் எது தெரியுமா?
ஹெல்த் டிப்ஸ்: மது அருந்தாதவர்களுக்கும் ‘ஃபேட்டி லிவர்’… என்ன காரணம்?
விஜய்சேதுபதியின் ‘டிரைன்’ : படப்பிடிப்பு நிறைவு!
சுட்டுக்கொல்லப்பட்ட நக்சல்கள்… அமித்ஷா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!