பியூட்டி டிப்ஸ்: வழுக்கை விழுவதைத் தடுக்கலாம்… எப்படி?

Published On:

| By christopher

வழுக்கை பிரச்சினையால் வாழ்க்கையே இல்லை என்று நினைப்பவர்கள் பலருண்டு. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டார்கள். தற்போது பெண்களுக்கும் இது ஏற்படுகிறது.

ஆண் – பெண் இருவருக்கும் முடிப் பராமரிப்பில் அக்கறையின்மை, ஸ்ட்ரெஸ் என வழுக்கைக்கு நிறைய காரணங்கள் உண்டு.

ADVERTISEMENT

வழுக்கை பெரும்பாலும் பரம்பரை ரீதியாக வருவதுதான் என்றாலும் வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல் முடி முளைக்கச் சாத்தியம் இல்லை.

ஆனால், கூடுமான வரையில், வராமல் தவிர்க்க முயற்சி செய்யலாம். எப்படி?

ADVERTISEMENT

சிலருக்கு மிளகு அளவில் தலையில் புழுவெட்டு வர ஆரம்பித்து, திடீர் என்று மண்டை முழுக்கப் பரவி, வழுக்கையை ஏற்படுத்தும். இதை ஆரம்பத்திலேயே கவனித்து விட வேண்டும். இதைத் தவிர்க்க…

தினசரி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக் குளியல் அவசியம். குளித்து முடித்ததும் தலைமுடியை இழுத்து, இறுக்கமாகப் பின்னுவதோ, கட்டுவதோ கூடாது. தளர்வான பின்னலும், ஹேர் ஸ்டைலும்தான் நல்லது.

ADVERTISEMENT

எலுமிச்சை விதைகள் 50, மிளகு 50, கைப்பிடி சின்ன வெங்காயம் மூன்றையும் கரகரப்பாக அரைத்து, வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து அலசினால், உயிர்ப்புள்ள வேர்க்கால்கள் திறந்து, மறுபடி வளரத் தொடங்கும்.

கிராமங்களில் கிடைக்கும் குமுட்டிக்காயை வாங்கி, அதை வெட்டினால் உள்ளுக்குள் ஈரப்பதம் இருக்கும். வழுக்கை விழும் பகுதியின் மேல் அதைத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து ஊறியதும் கழுவினால், உதிர்ந்த இடத்தில் முடி வளரும்.

மருத்துவ ரீதியில் தலைமுடியில் வேர்க்கால்கள் எப்படி இருக்கின்றன? அதற்கு உயிர் இருக்கிறதா? மறுபடியும் வளரச் செய்ய முடியுமா? என்று ஸ்கேன் மூலம் தெரிந்து அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் வழுக்கை விழாமல் தடுக்கலாம்.

தற்போது ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன் சிகிச்சை மூலம் வழுக்கைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன் மூலமும் வழுக்கையை விரட்டலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: ஆடுசதையில் பிடிப்பா… அலட்சியம் வேண்டாம்!

டாப் 10 நியூஸ் : புதிய ஆளுநர்கள் நியமனம் முதல் தனுஷ் பிறந்தநாள் வரை!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சாப்பிட்டதும் ஜூஸ் குடிப்பவரா நீங்கள்?

டிஜிட்டல் திண்ணை: பட்ஜெட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்- ஸ்டாலின், அமைச்சர்கள் ஆப்சென்ட் ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share