கிச்சன் கீர்த்தனா: ரவை ஃப்ரைடு பிஸ்கட்!

Published On:

| By Guru Krishna Hari

பள்ளியில் இருந்து வீடுகளுக்குத் திரும்பும் பல குழந்தைகளின் முதல் தேவை சாப்பிட என்ன கிடைக்கும் என்பதாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ரவை ஃப்ரைடு பிஸ்கட் உதவும். திடீர் விருந்தாளிகளுக்கேற்ற இந்த ஸ்நாக்ஸை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள்.

என்ன தேவை?

ரவை – ஒரு கப்

சர்க்கரை – 8 டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

முந்திரி, பால் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

உப்பு – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் ரவை, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், முந்திரி சேர்த்துப் பிசறவும். பிறகு பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறிய பந்துகளாக உருட்டவும். உருண்டைகளை வடை போலத்தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

தேங்காய்க்குப் பதில் கொப்பரைத் தேங்காயும் பயன்படுத்தலாம். ரவையை வறுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share