கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: சுவையான இறால் பிரியாணி செய்யலாம் வாங்க!

Published On:

| By Minnambalam Desk

பெரும்பாலான வீடுகளில் சண்டே ஸ்பெஷலாக மட்டன், சிக்கன் பிரியாணி வகைகளைச் சிறப்பாக செய்வார்கள். ஆனால், இறால் பிரியாணி செய்யும்போது ஏதோ ஒரு குறை இருக்கும். இந்தக் குறைகளைத் தவிர்த்து சுவையான இறால் பிரியாணி செய்யலாம் இன்று… How to Make Prawn Biryani

இறால் பிரியாணிக்கு சின்ன அளவில் உள்ள இறால் ஏற்றது. குக்கரில் தேவையான அளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, புதினா, கொத்தமல்லி தாளித்து, தேவையான அளவு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்க்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியதும் சிறிதளவு தயிர் சேர்க்கவும். இவை வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறாலையும் சேர்த்து வதக்கவும்.

பின்னர் ஊறவைத்த ஒரு கப் அரிசிக்கு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, உப்பும் சேர்த்து பத்து நிமிடம் வேகவைத்து இறக்கவும். புழுங்கல் அரிசியில் செய்தால் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில்கள் வந்ததும், ஐந்து நிமிடம் குறைந்த சூட்டில் வேகவைத்து இறக்கவும். சுவையான இறால் பிரியாணி தயார். How to Make Prawn Biryani

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share