ஹோட்டல் ஸ்டைலில் சுவையான தேங்காய் சட்னி செய்வது எப்படி? இதோ ரெசிபி..!

Published On:

| By Santhosh Raj Saravanan

How To Make Hotel style coconut chutney In Home Recipe Here

ஹோட்டல் ஸ்டைலில் சுவையாகவும், மணமாகவும் தேங்காய் சட்னி தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேங்காய் சட்னியை விரும்பாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. காலை உணவாக இருந்தாலும் சரி, மாலை நேர சிற்றுண்டியாக இருந்தாலும் சரி தேங்காய் சட்னி எப்போதும் இட்லி, தோசை, வடை போன்ற உணவுகளின் சுவையை மெருகூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் சட்னியில் இருந்து வரும் மணமும், அதன் சுவையும் சாப்பிட்ட திருப்தியை மேலும் கூட்டுகிறது.

ADVERTISEMENT

வீட்டில் நாம் தேங்காய் சட்னி தயாரித்து சாப்பிட்டு இருப்போம். ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை நாம் வீட்டில் இருந்தபடியே தயாரிக்கலாம். தேங்காய் சட்னியை தயாரிக்க வெறும் சில நிமிடங்கள் மட்டுமே போதுமானது. தேங்காய் சட்னியில் அதிகளவில் காரம் சேர்க்காததால் அது குடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அத்துடன், தேங்காயில் இயற்கையாகவே ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் தினமும் சேர்த்துக்கொள்வது நல்லது.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்

ADVERTISEMENT
  • ஒரு தேங்காய்
  • 2 முதல் 3 பச்சை மிளகாய்
  • 20 – 25 கறிவேப்பிலை
  • சிறிதளவு கொத்தமல்லி
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
  • வறுத்த பருப்பு – ஒரு தேக்கரண்டி
  • உப்பு
  • தண்ணீர்

தாளிக்க :

  • ஒன்றரை தேக்கரண்டி எண்ணெய்
  • ஒரு தேக்கரண்டி கடுகு
  • ஆறு முதல் எட்டு கறிவேப்பிலை
  • வெள்ளை உளுந்து கொஞ்சமாக

செய்முறை

ADVERTISEMENT

முதலில் ஒரு தேங்காயை சுத்தப்படுத்தி அதனை மிக்சியில் அரைப்பதற்கு ஏதுவாக சிறு துண்டுகளாக நறுக்கவும். பிறகு தேங்காய் துண்டுகள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சீரகம், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவும். சிறிது தண்ணீர் சேர்த்து கரகரப்பாகும் வரை மிக்ஸியில் அரைக்கவும். சட்னி உங்களுக்கு அதிகமாக தேவைப்பட்டால், அதற்கு ஏற்ற அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். கொழுந்தாக அரைக்கப்பட்ட சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.

பிறகு ஒரு வாணலி (அ) குழம்பு கரண்டியை சூடாக்கி, தாளிக்க தேவையான எண்ணெயைச் சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும், கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கறிவேப்பிலையைச் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். அதனை சட்னியின் மேல் ஊற்றி நன்கு கலக்கவும். இப்போது விரைவான, சுவையான மற்றும் மணமான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெடி. இட்லி, தோசை, வடை அல்லது எந்த உணவு வகையுடன் வேண்டுமானாலும் நீங்கள் இப்போது தொட்டுச் சாப்பிடலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share