இன்றைய நிலவரப்படி முடி உதிர்வு பிரச்சினை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது. வயது வித்தியாசமின்றி, ஆண் மற்றும் பெண் என்ற பாலின பேதமின்றி ஏராளமானோர் முடி உதிர்வு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சொல்லப் போனால் வயதானவர்களை விட இளம் வயதினருக்குத்தான் முடி உதிர்வு பிரச்சினை தீவிரமாக இருக்கிறது. இன்றைய இளைஞர்களின் துரித உணவு வகைகள், வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், மன அழுத்தம், பணிச்சூழல் மற்றும் பொடுகு தொல்லை எனப் பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம்.
முடி உதிர்வு பிரச்சினையைத் தவிர்க்க ஹேர் ஆயில், ஷாம்பு, சீரம் போன்ற பொருட்கள் அனைத்தும் சரியான பலனை கொடுக்கிறதா என்று பார்த்தால் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில், நம் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஹேர்பேக்கை நாமே தயாரித்துக் கொள்ள முடியும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெந்தயம் மற்றும் அரிசியை எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலை இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்த விழுதுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவையும், சிறிதளவு தயிரும் சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஹேர்பேக் தயாராகி விடும். How to make hair grow thicker
இதை தலை முடியில் நன்றாக தேய்த்துவிட்டு பின்னர் குளித்து விடலாம். இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ச்சியாக பயன்படுத்தினால், முடி உதிர்வு பிரச்சினை நீங்கி, முடி அடர்த்தியாக வளரும் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். How to make hair grow thicker