முட்டையை வேகவைத்து எக் 65 (Egg 65) செய்வது எப்படி, அதன் சமையல் முறைகள் குறித்து பார்க்கலாம்.
முட்டை என்பது அனைவருக்கும் பிடித்தமான உணவாக உள்ளது. பலரும் தங்கள் உணவில் அவித்த முட்டை, ஆம்லேட் என பல வடிவங்களில் முட்டையை சேர்த்துக்கொள்கிறோம். முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. முட்டையில் ஆரோக்கியமான (Nutrients in eggs) கொழுப்புகள், கோலின், மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் டி மற்றும் செலினியம் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
ஆனாலும் பல குழந்தைகள் முட்டையை சாப்பிடத் தயங்குகிறார்கள். முட்டையை வேகவைத்தாலும் சரி, பொரித்தாலும் சரி, குழந்தைகள் அதைச் சாப்பிடத் தயங்குகிறார்கள். ஆனால் எக் 65 செய்முறையை (Evening snack) ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் குழந்தைகள் நிச்சயமாக இதைச் சிரித்த முகத்துடன் சாப்பிடுவார்கள். எனவே, பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாகவும் சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பாகவும் இருக்கும் எக் 65 எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் (Egg 65 incredients)
- முட்டை – 4- 6
- இஞ்சி பூண்டு விழுது
- மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
- சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
- மைதா மாவு – 2 தேக்கரண்டி
- சோள மாவு – 4 தேக்கரண்டி
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
எக் 65 செய்வது எப்படி?
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை வேகவைத்து எடுத்து முட்டைகளின் தோலை உரித்து, வெள்ளைக் கருவை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது (Ginger garlic paste), மிளகாய்த் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மைதா மாவு, சோள மாவு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசைபோல் கலக்கவும்.
நறுக்கிய முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து, மசாலாப் பொருட்கள் முட்டையுடன் நன்கு கலக்கும்படி கிளறிக்கொண்டே இருக்கவும். இப்போது, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடாகும் போது முட்டைகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து, மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் வதக்கவும். முட்டைகள் 65 பதத்திற்கு மாறியதும், அவற்றை எண்ணெயிலிருந்து எடுத்து தட்டில் வைத்து எண்ணெய்யை வடிகட்டவும். மாலையில் குடும்பத்தினர் அனைவரும் இந்த உணவை நிச்சயம் விரும்பி உண்பார்கள்.குறிப்பாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து (Nutrition for children) மிகுந்த ஒரு உணவாக எக் 65 இருக்கும். நாம் சிக்கன் 65, காளான் 65 உள்ளிட்டவற்றை பார்த்திருப்போம். புதிதாக எக் 65 செய்து சாப்பிடுங்கள்.
