வீக் எண்டில் வெளியில் போய்தான் சாப்பிட வேண்டுமா என்ன? இந்த வீக் எண்டை உங்கள் வீட்டிலேயே கொண்டாட இந்த பாதாம் அல்வா பெஸ்ட் சாய்ஸாக அமையும்.
என்ன தேவை?
பாதாம் – அரை கிலோ
சர்க்கரை – அரை கிலோ
நெய் – 150 கிராம்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பால் – 100 மில்லி
குங்குமப்பூ – சிறிதளவு
பிஸ்தா – அலங்கரிக்க
எப்படிச் செய்வது?
பாதாமை சுடு நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அதன் தோலை உரித்து, பாலுடன் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, 50 கிராம் நெய்யை ஊற்றி உருகியதும், பாதாம் கலவையை சேர்த்துக் கிளறவும். பிறகு, சர்க்கரை சேர்த்து அது கரையும் வரை கிளறவும். சர்க்கரை உருகி கலவை கெட்டியானதும், மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். கலவை சுருண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி குங்குமப்பூ தூவி, பிஸ்தா பருப்புகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மணத்தக்காளி வற்றல் குழம்பு
கிச்சன் கீர்த்தனா : மைசூர் ரசம்