கொழுப்புச்சத்து இல்லாத ஆன்டி ஆக்ஸிடன்ட், நுண் ஊட்டச்சத்துகள், வைட்டமின் சி, ஏ நிறைந்துள்ள இதை அனைவரும் தினமும் குடிக்கலாம். குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள் குடித்துவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சீரற்ற மாதவிலக்கு, கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளின் தீவிரம் குறையும். ஃபோலிக் அமிலம் நிறைவாக இருப்பதால், குழந்தை பெறத் திட்டமிடுபவர்களும் கர்ப்பிணிகளும் சாப்பிட்டுவர, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
என்ன தேவை? How to Make ABC Fruit Juice
நடுத்தர அளவு பீட்ரூட், ஆப்பிள் – தலா 1
நடுத்தர அளவு கேரட் – 2
வெல்லம் – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
ஐஸ் கட்டி – 2
எப்படிச் செய்வது? How to Make ABC Fruit Juice
பீட்ரூட், கேரட், ஆப்பிளைத் தோல் நீக்கி நறுக்கிக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் ஒரு முறை அரைத்துக்கொண்ட பின், ஐஸ் கட்டிகள், வெல்லம் சேர்த்து அரைக்க வேண்டும். டம்ளரில் ஊற்றும்போது, எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, பருக வேண்டும்.