1990 வரை தடிமனான ஃப்ரேம் உள்ள மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பவர்களைப் பார்க்க முடிந்தது. பிறகு காலம் செல்லச் செல்ல, கண்ணாடி அணிவதால் கண்கள் இடுங்கிப்போவதும், மூக்கு வளைவதும் என முகமே மாறிவிடுகிறது என்பதால், கண்ணாடிகளின் உபயோகம் குறைந்து, கான்டாக்ட் லென்ஸ் வந்தது.
இன்று இளம்பெண்களில் பெரும்பாலானோர் தேவைக்காக லென்ஸ் அணிந்தாலும், ஃபேஷன், அழகுக்காக கண்ணாடியையும் பயன்படுத்துகின்றனர்.
அதிலும், மூக்குக்கண்ணாடியில் குறிப்பிட்ட ஃபிரேம் மட்டும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைஞர்களைப் பார்வையால் இழுக்க ஆரம்பித்திருக்கிறது.
இந்த நிலையில் உங்கள் கண்களைப் பாதுகாக்கும் மூக்குக் கண்ணாடியைப் பராமரிக்க வேண்டியதும் அவசியம்.
எனவே, மூக்குக் கண்ணாடிகளை உபயோகப்படுத்தாத நேரங்களில் அதன் உறையில் போட்டு வைத்திருக்க வேண்டும். அது முடியாவிடில் கண்ணாடி பாகம் மேஜை மீது படாதவாறு வைக்க வேண்டும்.
மூக்குக் கண்ணாடியைக் கழற்றும்போது இரண்டு கைகளாலும் கண்ணாடியின் விளிம்பில் இணையும் இடத்தில் பிடித்து கழற்ற வேண்டும்.
ஒரு கையால் கழற்றும்போது கண்ணாடி ஃபிரேம்கள் வளைந்து போகவும் உடைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன.
மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உபயோகப்படுத்தும் முன் ஒவ்வொரு முறையும் மென்மையான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.
மூக்குக் கண்ணாடிகளை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இணைப்புகள் தளர்ந்துவிடாமல் முகத்தில் சரியாக பொருந்தும்படி செய்து உபயோகித்துக் கொள்ள வேண்டும்.
கண்ணாடியில் கீறல் போன்ற சேதம் ஏற்பட்டாலும் மாற்றிவிடுவது நல்லது.
ஒருவரது மூக்குக் கண்ணாடியை மற்றவர் உபயோகப்படுத்தக் கூடாது. இதனால் அளவுகள் மாறி உரியவர் அணியும்போது பொருந்தாமல் அசௌகரியம் ஏற்படுத்தும்.
தேவையான நேரத்தில் பரிசோதனையைத் தவிர்ப்பதும், தள்ளிப்போடுவதும், தேவையற்ற நேரத்தில் பயப்படுவதும் கண்களைப் பொறுத்தவரை ஆபத்தையே விளைவிக்கும்.
இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கண்ணாடியை மாற்றினால் போதும்.
இடையில் பார்வை மங்கலாவதுபோல் தெரிந்தாலோ வெளிச்சத்தைப் பார்த்துக் கண் கூசினாலோ கண்களிலிருந்து நீர் வந்தாலோ உடனே கண் பரிசோதனை செய்தாக வேண்டும்.
40 வயதுக்கு மேல் வெள்ளெழுத்து பிரச்சினை, கண்ணில் அழுத்தம், கண்புரை என்று கண் சார்ந்த பிரச்சனைகளும் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற மற்ற உடல் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும் என்பதால் வருடத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : மாவற்றல் சாம்பார்
சட்டு புட்டுன்னு ஸ்கூல திறங்கடா: அப்டேட் குமாரு
அருணாச்சல் பாஜக… சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா… மீண்டும் ஆட்சியமைக்கும் ஆளும் கட்சிகள்!
கோவை எக்சிட் போல்: அண்ணாமலை என்ன ஆவார்?
ஹெல்த் டிப்ஸ்: மன அழுத்தம் – நீங்கள் செய்ய வேண்டியது இதைத்தான்!