ஹெல்த் டிப்ஸ்: நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா… கண்டுபிடிப்பது எப்படி?

Published On:

| By christopher

How to know if we are drinking enough water?

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பது சிறு வயது முதலே நம்மை விடாமல் விரட்டும் அறிவுரையாக இருக்கிறது. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடித்துப் பழகிய பலரும், தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதை ஞாபகம் வைத்துப் பின்பற்றுவதில்லை. தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்த போனில் ரிமைண்டர் வைத்துப் பின்பற்றுவோரெல்லாம் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தினமும் 8 டம்ளர் தண்ணீர் என்பது ஒருவருக்குப் போதுமானதாகவும், வேறொருவருக்கு குறைவாகவும் தோன்றலாம். எனவே, அது அவரவரின் தனிப்பட்ட தேவையைப் பொறுத்தது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள். தாகம் எடுப்பதை நீர் வறட்சிக்கான அறிகுறியாக உணர்ந்து உடனே தண்ணீர் குடியுங்கள். வெயில் காலங்களிலும் உடலுழைப்பு அதிகமான நாள்களிலும் வழக்கத்தைவிட கூடுதலாக தண்ணீர் குடியுங்கள் என்கிறார்கள்  இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட்ஸ்.

இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிசின் (Institute of Medicine), “ஆண்கள் நாளொன்றுக்கு 3 லிட்டர் அளவுக்கும், பெண்கள் 2 லிட்டருக்கும் சற்று அதிகமாகவும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நாளொன்றுக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. 150 மில்லி அளவுள்ள கப் அல்லது டம்ளரில் குடிக்கலாம்” என்று பரிந்துரைக்கிறது.

இந்த நிலையில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

“சிறுநீர் கழிக்கும்போது அதன் நிறத்தை கவனியுங்கள். வெள்ளையாக அல்லது வெளிர் மஞ்சளாக இருந்தால், நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம். அதுவே அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் நீங்கள் தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும் என்று புரிந்துகொள்ளுங்கள்” என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : NDA நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் முதல் வரலட்சுமி திருமணம் வரை!

கிச்சன் கீர்த்தனா : மெக்சிகன் சிக்கன் ஊத்தப்பம்

மோடிக்கு மெஜாரிட்டியா? மாநிலங்களவையில் திருச்சி சிவா காட்டம்!

அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்

ஏழாவது அட்டவணையின் முக்கியத்துவம்!!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share