இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் ஆட்தேர்வுக்கான பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாகவும் இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
அதிகாரிகள் அல்லாத படைவீரர்களை ஆயுதப்படையில் சேர்த்துக் கொள்வதற்காக இந்தியப் பாதுகாப்புத் துறை அறிமுகப்படுத்தும் திட்டமே இது.
ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கும் இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தத் திட்டத்தின் பின் கீழ் பணியமர்த்தப்படுவார்கள். நான்கு ஆண்டு பணிக்காக இவர்களுக்கு ஆறு மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். அக்னி வீரர்கள் இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரியலாம். Agniveer in Tamilnadu
பணிக்காலம் முடிவடைந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவிகிதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். விருப்பம், பணித் திறன் மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்த நடவடிக்கை இருக்கும்.
இந்த நிலையில், இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் ஆட்தேர்வுக்கான பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ராணுவ ஆட்சேர்ப்பு! Agniveer in Tamilnadu
இதுகுறித்து கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர், கர்னல் அன்சூல் வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை ராணுவ ஆட்தேர்வு அலுவலகம், இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் ஆட்சேர்ப்புக்கான தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
2025 ஏப்ரல் 10-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். அக்னி வீரர் பொது பணியாளர், அக்னி வீரர் தொழில் நுட்பம், அக்னிவீரர் எழுத்தர், கிடங்கு மேலாளர், அக்னி வீரர் தொழிலாளி (10-ம் வகுப்பு தேர்ச்சி), அக்னி வீரர் தொழிலாளி (8-ம் வகுப்பு தேர்ச்சி) விண்ணப்பதாரர்கள் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 1.6 கி.மீ ஓட்டப் பரிசோதனைக்கான நேரம் 5 நிமிடம் 45 விநாடிகளிலிருந்து 6 நிமிடம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. Agniveer in Tamilnadu
என்சிசி, ஐடிஐ, பாலிடெக்னிக், டிப்ளோமா முடித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நுழைவுத்தேர்வு (சிஇஇ) தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். முதலில் ஆன்லைன் பொதுத்தேர்வு (சிஇஇ) நடைபெறும். தொடர்ந்து ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படும். தேர்வு தேதிகள் விரைவில் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
இந்த ஆட்சேர்ப்பு முறையே முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டது. மோசடி செய்யும் ஏஜென்ட்டுகளிடம் ஏமாற வேண்டாம். மேலும், விவரங்களுக்கு, www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Agniveer in Tamilnadu