பியூட்டி டிப்ஸ்: அடர்த்தியான புருவங்கள் அமைய வேண்டுமா?

Published On:

| By Kavi

How to Grow Thicker Eyebrow

கருத்த அடர்த்தியான புருவங்கள், இமைகள் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு. இந்த ஆசையை வீட்டில் உள்ள பொருட்கள் மூலமே சாத்தியப்படுத்தலாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.

மிகவும் அடர்த்தியாக இருக்கும் விளக்கெண்ணெயின் பயன்பாடு தற்போது குறைந்துவிட்டதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. புருவங்களை அடர்த்தியாக்க தினமும் இரண்டு முறை புருவங்களில் விளக்கெண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இது தொற்றுகளில் இருந்து புருவங்களை பாதுகாக்க உதவும். புருவ முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கும்.

ADVERTISEMENT

ஆலிவ் எண்ணெயும் புருவங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். தூங்குவதற்கு முன்பு, 4-5 துளிகள் ஆலிவ் எண்ணெயை எடுத்து அத்துடன் 3 துளிகள் தேனை கலந்து புருவங்களில் மசாஜ் செய்ய வேண்டும்.

வெங்காயச் சாற்றில் உள்ள தாதுக்கள், வைட்டமின்கள், சல்பர், செலினியம் ஆகியவை முடிக்கு வலுவூட்டுகிறது. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை புருவத்தில் வெங்காயச் சாற்றை தேய்த்து வரலாம்.

ADVERTISEMENT

எட்டு சொட்டு விளக்கெண்ணெய், பத்து சொட்டு ஆலிவ் ஆயில் இரண்டையும் சேர்த்து லேசாகச் சூடாக்கி, அதில் இரண்டு துளசி இலையைப் போடவும். எண்ணெய் ஆறியதும் எடுத்துவைத்துக்கொண்டு, தினம் விரல்களால் தொட்டு, புருவம் மற்றும் இமைகளில் தடவி வரவும். இமை முடிகள் கொட்டாது; கொட்டினாலும் சரியாகிவிடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

சென்னை அணியில் ரோகித் சர்மா? காசி விஸ்வநாதன் சொல்வது என்ன?

நெல்லைக்கு வெண்ண… குமரிக்கு சுண்ணாம்பா? : அப்டேட் குமாரு

ரஜினி vs விஜய் vs அஜித்: 2023ன் டாப் 10 தமிழ் படங்கள் எவை?

“காளி கோயில்ல பூஜை செஞ்சியே என்னாச்சு பாத்தியா?”- தண்டனைக்கு பின் ஆதரவாளரிடம் சிரித்த பொன்முடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share