நீளமான அழகிய கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் இல்லை என்கிற நிலையில் அதை எளிதில் பெறுவதற்கு இதைப் பின்பற்றுங்கள்.
உங்கள் கூந்தலை எண்ணெய் மசாஜ் செய்வது தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது தேவையான ஊட்டச்சத்தைக் கொண்டு சேர்க்க உதவும்.
தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. மயிர்க்கால்களையும் பலப்படுத்தும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். கூந்தலுக்கு மிருது தன்மையையும், பொலிவையும் ஏற்படுத்திக்கொடுக்கும். பொடுகு பிரச்சினையையும் போக்கும்.
ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஒருமுறை கூந்தலை ட்ரிம் செய்வது அவசியம். அது உங்களை பிளவு பெற்ற கூந்தலில் இருந்து விடுவிக்கும்.
நல்ல ஷாம்பூ கூந்தலை நன்றாக கிளென்ஸ் செய்து தூசிகளில் இருந்து காத்து கூந்தலுக்கு ஆரோக்கியம் அளிக்கும். உங்கள் கூந்தலை ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு சுத்தம் செய்ததும் குளிந்த நீரால் கூந்தலை அலசவும். இது உங்கள் கூந்தலில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும்.
சூடான நீரில் தலைக்குளிப்பதை தவிர்க்கவும். ஹீட் ஸ்டலிங் செய்வதை குறைத்திடுங்கள். ஸ்ட்ரெயிட்னர் மற்றும் கலர் போன்ற சாதனங்களை அடிக்கடி பயன்படுத்துவதைக் குறைத்திடுங்கள். இது உங்கள் கூந்தலை எளிதில் உடையச் செய்யும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறேனா? – சஸ்பென்ஸை உடைத்த பிரபல இயக்குநர்!
ஆம்ஸ்ட்ராங் கொலை: தந்தை நாகேந்திரன்… மகன் அஸ்வத்தாமன்… போலீஸ் கஸ்டடியில் நடப்பது என்ன?
நீயும் என்ன விட்டுட்டு டீ பார்ட்டிக்கு போயிட்டியா? : அப்டேட் குமாரு