பியூட்டி டிப்ஸ்: முகத்தில் சருமத் துவாரங்கள்… நீக்குவது எப்படி?

Published On:

| By Kavi

How to get rid of pores on the face

How to get rid of pores on the face

முகத்தில் ஏற்படும் சருமத் துவாரங்களை நிரந்தரமாக நீக்க முடியுமா என்ற கேள்வி இன்று நிறைய பேருக்கு இருக்கிறது. அதற்கு முன் சருமத் துவாரங்கள் இருப்பது சாதாரணமானதா, அசாதாரணமானதா, அதற்கு சிகிச்சை அவசியமா என்பதையெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம்.

சருமத் துவாரங்கள் பொதுவாக, மூக்கு, கன்னங்களுக்கு அருகில் இருக்கும். நம் சருமத்தில் எண்ணெய்ப்பசை சுரக்கும். சிலருக்கு இது அளவுக்கு அதிகமாகச் சுருக்கும்.

அதனால் பருக்கள் அதிகமிருக்கும். முகத்திலுள்ள சருமம் வீக்கத்துடன் காணப்படும். இதனால் சருமத் துவாரங்கள் பெரிதாகி, வெளியே தெரியும்.

நம்முடைய சீதோஷ்ணநிலை காரணமாகவும் சிலருக்கு சருமத் துவாரங்கள் வெளிப்படையாகத் தெரியும். இது சாதாரணமானதுதான். ஆனால், அது முக அழகையே கெடுக்கும்படி பெரிதாகத் தெரிவதால்தான் பலரும் அது குறித்து கவலை கொள்கிறார்கள்.

இதை ஒரு க்ரீமாலோ, ஜெல் மூலமோ நிரந்தரமாக நீக்கவெல்லாம் முடியாது. அது தெரியாமல் பலரும் மருத்துவப் பரிந்துரையில்லாமல் மருந்துக் கடைகளில் க்ரீம் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.

சில வீடியோக்களில் சிலிக்கான் சிகிச்சைகள் மூலம் இந்த துவாரங்களை நிரந்தரமாக நீக்கிவிட முடியும் என்றெல்லாம் காட்டப்படுவதை உண்மையென நம்பி, மருத்துவ ஆலோசனையின்றி அவற்றைச் செய்துகொள்ள முனைகிறார்கள்.

அப்படியானால் சருமத் துவாரங்களை சரிசெய்ய சிகிச்சைகளே இல்லைபோல என நினைத்துக்கொள்ள வேண்டாம். சருமத் துவாரங்களை சரி செய்வதற்கான சிகிச்சைளை பொதுவாக மூன்றாகப் பிரித்துக்கொள்ளலாம்.

க்ரீம் உபயோகிப்பதன் மூலம், எனர்ஜி அடிப்படையிலான கருவிகளின் மூலம், ஊசிகள் மூலம் என இதைப் பல வழிகளில் அணுகலாம்.

பருத் தொல்லையும், எண்ணெய்ப்பசையான சருமமும்தான் இந்தப் பிரச்சினைக்கான பிரதான காரணம். எனவே, முதலில் அந்தப் பிரச்னைகளைச் சரி செய்ய வேண்டியது அவசியம்.

அதையடுத்து வைட்டமின் ஏ, ரெட்டினால் கலந்த க்ரீம் உபயோகிக்கும்போது சருமத் துவாரங்கள் நன்கு சுருங்கும்.

எனர்ஜி பேஸ்டு கருவிகளான மைக்ரோ நீட்லிங் அல்லது லேசர் சிகிச்சை செய்யலாம். இதன் மூலம் சருமத்தின் கீழே உள்ள திசுக்கள் தூண்டப்பட்டு துவாரங்கள் மூடப்படும்.ஹைலுரானிக் ஆசிட் உள்ள ஊசி போடப்படும்போது, சருமத்தில் ஈரப்பதம் அதிகமாகி, துவாரங்கள் மூடும். ஆனால், இதன் பலன் 8 முதல் 12 மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும்.

மற்றபடி இது நிரந்தரமான சிகிச்சை அல்ல. உங்களுக்கு எந்தச் சிகிச்சை தேவை, எப்படிச் செய்யப்படும் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள சரும மருத்துவரிடம் நேரடி ஆலோசனை பெறுங்கள் என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : சைனீஸ் ஸ்பிரிங் ரோல்!

டிஜிட்டல் திண்ணை: நிர்மலா பேட்டியால் கொதித்த தமிழ்நாடு- சமாளிக்க மோடி எடுத்த அவசர ஆக்‌ஷன்!

ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி: கூட்டணிக் கட்சிகளை சமாளித்து முடித்த திமுக

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

How to get rid of pores on the face

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share