பியூட்டி டிப்ஸ்: வெடிப்புகள் இல்லாத உதடுகளைப் பெற…

Published On:

| By Selvam

How to Get Rid of Lip Breakouts

குளிர்காலத்தில் உதட்டில் எண்ணெய்ப் பசை இல்லாமல் போவதால் உதடுகள் உலர்ந்து சிலருக்கு வெடிப்புகள் ஏற்படும். வட இந்தியர்கள் குளிர்காலத்தில் அதிகமாக லிப்ஸ்டிக் பயன்படுத்துவார்கள். அவர்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கின் தரம் ஓரளவு உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளைச் சரி செய்யும். ஆனால், தரம் குறைந்த லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தும்போது வறட்சியுடன் சேர்ந்து அலர்ஜியும் ஏற்படும்.

லிப்ஸ்டிக் பயன்படுத்தாதவர்கள் உதடு வறண்டு போனால் நாவால் உதட்டை ஈரம் செய்வார்கள். இப்படிச் செய்வதால் உதட்டில் ஈரப்பதம் ஏற்படாது, வறட்சிதான் அதிகமாகும். காரணம், நம் உமிழ்நீரில் எண்ணெய் மூலக்கூறுகளை நீக்கும் என்ஸைம்கள் உள்ளன. அதனால், ஏற்கெனவே வறட்சியாக உள்ள உதடு உமிழ்நீர்படும்போது மேலும் வறண்டு போகும். சிலருக்கு அடிக்கடி உதட்டைக் கடிக்கும் பழக்கும் இருக்கும். இதுவும் உதடு வறட்சியாவதற்கான காரணம்.

இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட அதிகம் தண்ணீர் குடியுங்கள். உதட்டுக்குத் தரமான அழகு சாதனப் பொருள்களை உபயோகியுங்கள். நிறமூட்டிகள் அற்ற வெள்ளை நிற பற்பசையை உபயோகிப்பதே சிறந்தது. தேன் அல்லது வெண்ணெயில் சிறிதளவு வெள்ளை சர்க்கரையைக் குழைத்து உதட்டில் தடவலாம். ஆயில் மாய்ஸ்ச்சரைசர் க்ரீம்களைப் பயன்படுத்தினால் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளில் இருந்து விடுதலை பெறலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மாநாடு முடிஞ்சி அயோத்திக்கு போறேன் : அப்டேட் குமாரு

சென்னை புத்தக கண்காட்சியில் ரூ.10 கோடிக்கு மேல் விற்பனை : பபாசி எஸ்.கே. முருகன்

அயோத்தியில் நித்தியானந்தா?

ராமர் கோயில் திறப்பு: தீபம் ஏற்ற ஆளுநர் அழைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share