பியூட்டி டிப்ஸ்: வியர்வையை விரட்ட ஈஸி வழி!

Published On:

| By Kavi

குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குளித்தால், கோடைக் காலத்தில் ஏற்படும் வியர்வை வாடை நீங்கும். உடல் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

வெதுவெதுப்பான வெந்நீரில் இரண்டு ஸ்பூன் சீயக்காய்த்தூள், வெந்தயத்தூள் கலந்து குழைத்து, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்தால் வியர்வை வாடை வராது.

குளித்துவிட்டு வந்ததும், நன்கு துடைத்துக்கொண்டு மருதாணி எண்ணெய் தடவி வந்தால், வியர்க்குரு விலகும்

வெயில் காலத்தில் சோப்பு தேய்த்துக் கொள்வதை தவிர்த்து விட்டு, பயத்தமாவு, கடலை மாவு தேய்த்து குளிப்பது நல்லது.

ரோஜா, ஆவாரம்பூ, மகிழம்பூ, மரிக்கொழுந்து, செண்பகப்பூ ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, பொடித்து, குளிக்கும்போது தேய்த்துக்கொண்டால், தோல் ஒவ்வாமை ஏற்படாது. நறுமணம் வீசும்.

கோடைக் காலத்தில் பச்சைப்பயறு, துளசி, மஞ்சள், வேப்பிலை, இவற்றை சிறிது நேரம் வெயிலில் காயவைத்து, பொடித்து வைத்துக்கொண்டு, தேய்த்துக் குளித்தால் உடல் குளிர்ச்சியாகும்.

கோடையில் தினமும் இருமுறை குளித்தால், சுறுசுறுப்பாக இருக்கும். உடலும் சுத்தமாக இருக்கும். இரவு நன்கு உறக்கம் வரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உக்ரைன் அதிபரை விட உக்கிரமா இருக்காரய்யா… அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணியில் இருந்து புறப்படுகிறாரா வைகோ? 4 எம்.எல்.ஏ.க்களை மடக்கும் அமைச்சர்கள்!

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: குற்றவாளி நடத்திய நாடகம்… புதுச்சேரியில் நடந்தது என்ன?

”இது நல்லா இருக்கே” : முன்னணி ஹீரோவிற்கு காய் நகர்த்தும் ஜேசன் சஞ்சய்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share