கோடைக்காலத்தில் தினமும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்து வேலைக்குச் செல்பவர்கள் உடலில் வெயில்படும் இடங்களில் கருமையாக இருக்கும். அதை நிரந்தரமாகப் போக்க முடியுமா… வீட்டிலேயே ஏதேனும் சிகிச்சைகள் செய்து சருமத்தை பழைய நிறத்துக்குக் கொண்டு வர முடியுமா? சருமநல மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
“வெயிலால் ஏற்படும் கருமை வராமலிருக்க, சன் ஸ்கிரீனை தேர்வு செய்வதிலிருந்தே அதற்கான அக்கறை தொடங்க வேண்டும்.
சிலர் காலையில் தடவிக்கொண்டு செல்லும் சன்ஸ்கிரீனுடனேயே மாலை வரை இருப்பார்கள். ஆனால், அது போதாது.
உதாரணத்துக்கு, சன் ஸ்கிரீனில் எஸ்பிஎஃப் (SPF) 15 எனக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தடவியதிலிருந்து 45 நிமிடங்கள் வரை தான் பாதுகாப்பு கொடுக்கும். அதன் பிறகு வெயிலின் தாக்கமானது சருமத்துக்குள் ஊடுருவ ஆரம்பிக்கும்.
எனவே, நாம் எத்தனை மணி நேரம் வெயிலில் இருக்கிறோம், எந்த ஊரில் இருக்கிறோம், எந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து, அதற்கேற்ப எஸ்பிஎஃப் (SPF) உள்ள சன் ஸ்கிரீனை தேர்வு செய்ய வேண்டும்.
வெயில் அதிகமுள்ள சூழலில் அதிக எஸ்பிஎஃப் உள்ள சன் ஸ்கிரீனை உபயோகிக்க வேண்டும். சன் ஸ்கிரீன் உபயோகித்தாலும் சருமம் கருத்துப் போக இதுதான் முக்கிய காரணம்.
வெயில் பட்டுக் கருத்துப்போன சருமம், அது நீண்ட நாள் தாக்கத்தின் விளைவாக உருவாகியிருக்கும் பட்சத்தில், பிக்மென்ட்டேஷன் (pigmentation) எனும் பிரச்சினையாக மாறும்.
அதாவது, வெயிலில் செல்லும்போது சருமத்துக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் செல்வது, நீண்ட நாட்கள் அப்படியே இருப்பதெல்லாம் வாயைச் சுற்றி, நெற்றியைச் சுற்றி கரும்படலத்தை ஏற்படுத்தும்.
அந்த நிலைக்குச் செல்லாமல் தடுப்பதுதான் முக்கியம். ஒருவேளை அப்படி கரும்படலம் வந்துவிட்டால், வீட்டு சிகிச்சைகள் எல்லாம் உதவாது. பிரத்யேக சிகிச்சைகள் தேவைப்படும்.
வெயிலில் அலைந்துவிட்டு வந்ததும் அன்றைய தினமே செய்கிற சில சிகிச்சைகளால், சருமத்தில் ஏற்பட்ட கருமை உடனடியாக மறைந்து விடும். அடுத்த நாள் காலையே சருமம் பளிச்சென இருக்கும்.
சன் ஸ்கிரீன் உபயோகிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், குடை உபயோகிப்பது, தொப்பி உபயோகிப்பது, ஸ்கார்ஃப் கட்டிக்கொள்வது போன்றவை கூடுதல் பலன்களைத் தரும்.
மருந்துக் கடைகளில் கேலமைன் ஐபி லோஷன் (Calamine Lotion Ip) எனக் கிடைக்கும். லாக்டோ கேலமைனையும் இதையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
வெயிலில் அலைந்துவிட்டு வந்த தினம் மாலை, கேலமைன் ஐ.பி லோஷனில் கால் டீஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும். பேக்கிங் சோடா சேர்த்ததும் அந்தக் கலவை நுரைத்து வரும். அந்த நுரை அடங்குவதற்குள் அதை எடுத்து சருமத்தில் கருத்துப்போன இடங்களின்மேல் தடவ வேண்டும். முகம், கழுத்து, கை, கால்கள், முதுகு என எல்லா பகுதிகளிலும் இதைத் தடவலாம். நன்றாகக் காய்ந்த பிறகு துடைத்து எடுக்க வேண்டும்.
புளித்த தயிரை நன்கு அடித்துக்கொண்டு, அதில் ஓட்ஸை பொடித்துப் போட்டு, இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து முகத்தில் தடவவும். தினமும் கேலமைன் ஐபி லோஷனும், வார இறுதியில் தயிர்-ஓட்ஸ் பேக்கும் போட்டு வந்தால் வெயில்பட்டுக் கருத்துப்போன சருமம் பழைய நிறத்துக்குத் திரும்பும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்?
நல்ல காலம் பொறக்குது: அப்டேட் குமாரு
T20 World cup 2024: இந்தியாவிற்கு எப்போது போட்டிகள்? முழு அட்டவணை இதோ!
மோடி தியானம் நேரடி ஒளிபரப்பு: தேர்தல் ஆணையருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்!