தமிழக அரசு வழங்கும் தொழில்முனைவோருக்கான கடனுதவி: பெறுவது எப்படி?

Published On:

| By Raj

How to Get NEEDS Loan

முதல் தலைமுறை தொழில்முனைவோர் தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தில் கடனுதவி பெறலாம். எப்படி என்கிற விவரத்தை என ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். How to Get NEEDS Loan

தமிழக முதல்வர் மூலமாக, முதல் தலைமுறை தொழில்முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்கு கைகொடுக்கும் நோக்கத்தில் நீட்ஸ் (NEEDS – New Entrepreneur cum Enterprise Development Scheme) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக அவர்களை ஊக்குவிக்க கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், அனைத்து பிரிவினரும் பயன்பெறலாம். ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்டத்தில் உற்பத்தி அல்லது சேவை தொழில் நிறுவனங்களை அமைக்கலாம்.

பயனுற விழைவோர் வயது 21-45 க்குள் இருக்க வேண்டும். பெண்கள் / பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் / பட்டியல் வகுப்பினர் / பட்டியல் பழங்குடியினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் / மாற்றுப் பாலினத்தவர் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு 55 வயது வரை தளர்வு உண்டு. இதற்கு குறைந்தபட்சம் 12 -ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழில்நுட்பக் கல்வியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு நீட்ஸ் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரில் மருத்துவர் அச்சுதன் என்பவர் ஜீவன் லைப் மருத்துவமனை என்ற பெயரில் ரூ.3.42 கோடி மதிப்பீட்டில் கடனுதவி பெற்று மருத்துவமனை கட்டி மருத்துவ சிகிச்சைகள் வழங்கி வருகிறார்.

இதன் செயல்பாடுகள் மற்றும் பயன்களை பார்வையிட்ட ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, செய்தியாளர்களிடம் பேசியபோது, “தொழில்முனைவோரின் பங்களிப்பு பொது பிரிவினருக்கு திட்டத்தொகையில் 10 சதவிகிதம் சிறப்பு பிரிவினருக்கு 5 சதவிகிதமாகும். தனிநபர் முதலீட்டு மானியம் திட்டத்தில் 25 சதவிகிதமாகும். அதிகபட்சம் ரூ. 75 லட்சம் வரை மானியமும் வழங்கப்படும். How to Get NEEDS Loan

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டு நிதியாண்டில் 16 விண்ணப்பங்கள் பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததில், 27 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 13 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 11 பயனாளிகளுக்கு ரூ.155.21 லட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி அரசின் மானியத்தைப் பெறலாம். அத்துடன், குறைந்த வட்டி விகிதத்தில் தொழில் செய்து தொழில்முனைவோராக உருவாகி, மற்றவர்களும் வேலை வழங்கி முன்னேற்றம் அடையலாம். இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். How to Get NEEDS Loan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share