மெஹந்தியைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் கைகளை சாதாரண சோப்பு போட்டு கழுவுங்கள். க்ரீம்கள் அல்லது லோஷன்களைப் பயன்படுத்த வேண்டாம். விதிவிலக்காக யூகலிப்டஸ் ஆயில் பயன்படுத்தலாம். பின்னர் இயற்கையாக உங்கள் கைகளை உலர விடுங்கள்.
மெஹந்தி போட்டு முடித்ததும் அது காயும் வரை அசையாமல் வைத்திருங்கள். கைகளின் மீது சிறு துணுக்குகள் விழுவதையும் தடுக்கவும். மெஹந்தி சிக்கீரம் காய வேண்டும் என்பதற்காக போன் மற்றும் ஹேர் டிரையரைப் பயன்படுத்த வேண்டாம்.
மெஹந்தி முழுவதுமாக காய்ந்த பிறகு, சர்க்கரை மற்றும் எலுமிச்சைச் சாற்றை உங்கள் கைகளில் தடவவும். பஞ்சு (காட்டன்) வைத்து மென்மையாகப் பயன்படுத்தலாம்.
பின்னர் மெஹந்தியை அகற்ற உங்கள் கைகளை மெதுவாக தேய்க்கவும். இதைப் பின்பற்றினால் நீங்கள் அடர் நிறத்தில் அழகான மெஹந்தியைப் பெறுவீர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சொர்க்கலோக எடிஷன் இருக்கா என்ன? : அப்டேட் குமாரு