நடிகைகள், மாடல்கள் போன்றவர்களின் சருமம் பளபளப்பாக, சுருக்கங்கள் இன்றி இருப்பதைப் பார்க்கிறோம். சாமானியர்களுக்கு அப்படிப்பட்ட சருமம் சாத்தியமில்லையா…
காஸ்ட்லியான அழகு சிகிச்சைகளும் காஸ்மெட்டிக்ஸும் உபயோகித்தால்தான் அது சாத்தியமா என்கிற சந்தேகம் பலருக்குண்டு.
“நடிகைகள், மாடல்கள் போன்றோர், எல்லா நாட்களும் எப்போதும் தங்களை அழகாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருப்பவர்கள். அதற்காக அவர்கள் அளவுக்கதிகமாக மெனக்கெட்டு மேக்கப் போடுவார்கள்.
சாமானியர்களிடம் அந்த அக்கறையும், மெனக்கெடலும் குறைவு… அதுதான் வித்தியாசம். மற்றபடி நீங்கள் நினைக்கிற அளவுக்கு காஸ்ட்லியான சிகிச்சைகளோ, அழகு சாதனங்களோ இருந்தால்தான் அழகும், இளமையும் சாத்தியம் என்பதே இல்லை” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
மேலும், “பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஒரு பேட்டியில், கடலை மாவும் தயிரும் கலந்து முகத்துக்குத் தடவுவதாகச் சொன்னார்.
அதேபோல நடிகை ப்ரியங்கா சோப்ராவும், அவரின் அம்மாவும் பாட்டியும் சொல்லும் வீட்டு சிகிச்சைகளைத்தான் பின்பற்றுவதாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
நாம்தான் பிரபலங்கள் எல்லாம் காஸ்ட்லியான சிகிச்சைகளையும் காஸ் மெட்டிக்ஸையும் பயன்படுத்துவார்கள் போல என நினைத்துக்கொள்கிறோம்.
கிளென்சர், டோனர், மாய்ஸ்ச்சரைசர் – இந்த மூன்று பொருட்களைப் பயன்படுத்தினாலே போதும். கிளென்ஸ் செய்ததும் முகம் கழுவலாம் அல்லது குளித்துவிடலாம். அதன் பிறகு டோனரை முகம் முழுக்க ஒற்றி எடுத்தால் சருமத் துவாரங்கள் மூடிக்கொள்ளும்.
அதன் பிறகு மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம். அதுவே வெளியில் செல்வோர் என்றால், மாய்ஸ்ச்சரைசருக்கு பதில் சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.
பிரபலங்கள் என்னதான் பிசியாக, களைப்பாக இருந்தாலும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் மேக்கப்பை அகற்றத் தவற மாட்டார்கள். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயால் மேக்கப்பை துடைத்து எடுத்துவிட்டு, ஃபேஸ் வாஷ் கொண்டு முகம் கழுவினால் போதுமானது. அதன் பிறகு மாய்ஸ்ச்சரைசரோ, நைட் க்ரீமோ பயன்படுத்தலாம். இதை முறையாகச் செய்து வந்தால் பிரபலங்களின் சருமப் பளபளப்பை நீங்களும் பெறலாம்” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கேரட் சப்ஜா ஜூஸ்
ஒரே மாசம் வெயிலுக்கும் லீவு… மழைக்கும் லீவு… : அப்டேட் குமாரு
சென்னையில் நள்ளிரவில் பெய்த கனமழை… விமான சேவை பாதிப்பு : இன்று எப்படி இருக்கும்?