சிலர் தங்கள் பர்ஸில் பணம், சில்லறைகளுடன் அடையாள அட்டைகள், இன்னும் சில பல அட்டைகள், காகிதங்கள் என பல விஷயங்களைத் திணித்து பர்ஸை குண்டாக்கி பின்பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். இதை, குண்டான பணப்பை நோய் (Fat Wallet Syndrome) என்று சொல்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
இதை பின்பாக்கெட்டில் வைத்து நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்கும்போது, பர்ஸ் உங்கள் பிட்டத்தில் இருக்கிற பைரிஃபார்மிஸ்ங்குற (Piriformis) தசை மேல அதீத அழுத்தம் கொடுக்கும்.
அந்தத் தசை, இடுப்பு மற்றும் பிட்டத்தில் இருந்து காலுக்குச் செல்லும் சயாடிக் நரம்பை (Sciatic Nerve) அழுத்தும். இதனால், சயாடிக் நரம்புக்குத் தேவையான ரத்த ஓட்டம் சரியாகக் கிடைக்காமல் அழுத்தத்துக்கு உள்ளாகி அந்த நரம்பு காயத்துக்கு உள்ளாகும்.
இதனால் பிட்டம் மற்றும் பின்னங்கால் தொடைப்பகுதியில் வலி, மரமரப்பு, எரிச்சல், மின்சாரம் பாய்றது மாதிரி உணர்வு, சுண்டி இழுக்கும்.
இதே போன்ற பிரச்சினை, சமதளமாக இல்லாத இருக்கையில் தொடர்ந்து நீண்ட நேரம் அமரும்போதும் சிலருக்கு ஏற்படலாம்.
இருக்கை சரிசமமாக இல்லாமல் ஒரு பக்கம் ஏற்றமும் இன்னொரு பக்கம் இறக்கமுமாக இருந்தால் அதன் மூலமும் ஒரு பக்க சயாடிக் நரம்புக்கு அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
“இந்த ‘ஃபேட் வாலட் சிண்ட்ரோம்’ இருப்பது தெரிந்தால், எலும்பியல் நோய் சிறப்பு மருத்துவரை உடனே அணுக வேண்டும். இதற்குண்டான வேறு காரணங்களினால் வலி இல்லை என்பதை அவர் உறுதிசெய்து விட்டு, உரிய மருத்துவ சிகிச்சையை வழங்குவார்.
இதேபோன்ற அறிகுறிகள் கீழ் முதுகுப் பகுதி தண்டுவட சவ்வு தண்டுவட நரம்பை அழுத்துவதாலும் ஏற்படக்கூடும். எனவே, எலும்பியல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
கூடவே, ஃபிசியோதெரபி எனும் இயன்முறை மருத்துவத்தையும் தவறாது செய்தால் விரைவில் மீண்டு வரலாம்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ஜம்மு காஷ்மீர் முதற்கட்ட தேர்தல் முதல் புதுச்சேரியில் பந்த் வரை!
கிச்சன் கீர்த்தனா : தானிய கஞ்சி
பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஸ்பெஷல் பஸ்!
ஆக்ஸ்போர்டு டூ அரசியல் – தலைநகருக்கு மீண்டும் பெண் முதல்வர் : யார் இந்த அதிஷி?
ஹெல்த் டிப்ஸ்: மழைக்காலக் குளியலுக்கு ஏற்றது வெந்நீரா? குளிர்ந்த நீரா?