முளைகட்டிய பயிரை காலை உணவாக எப்படி சாப்பிடலாம்? ஈஸியான டிப்ஸ் இதோ

By Santhosh Raj Saravanan

|

Published on 6 Dec 2025, 9:49 AM

How to eat sprouted grains for breakfast some easy tips

முளைக் கட்டிய பயிரை காலை உணவாக சாப்பிடுபவர்கள் இந்த முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

இயந்திரமயமான தற்போதைய வாழ்க்கையிலும் பலரும் வேக வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் உடல்நலனில் அக்கறை செலுத்துவதற்கு அவர்களுக்கு போதிய நேரம் இருப்பதில்லை. அத்துடன், உணவையும் வேகமாக சாப்பிவிட்டுவிட்டுச் செல்கிறார்கள். குறிப்பாக காலை உணவை அவசர அவசரமாக சாப்பிட்டு கிளம்புபவர்கள்தான் நம்மில் பெரும்பாலானோர்.

ADVERTISEMENT

காலை உணவாக நார் சத்துக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவாக முளைக்கட்டிய பயிர் வகைகளையே எடுத்துக் கொள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். மக்கள் முளைகட்டிய பயிர்களை சாப்பிடும் போது பொதுவாக மூன்று தவறுகளை செய்கின்றனர். இதனால் வயிறு உப்புசம், அஜீரணம், அமிலத்தன்மை அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. காலை உணவாக நாம் முளை கட்டிய பயிரை எடுத்துக்கொள்ளும்போது செய்யக்கூடாத 3 தவறுகளைப் பார்ப்போம்.

நன்றாக சமைக்காமல் (அ) பாதி வெந்த உணவை சாப்பிடுவது

ADVERTISEMENT

முதலில் பயிரில் நன்றாக முளை கட்டி உள்ளதா, சாப்பிடுவதற்கு ஏதுவாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். பயிரில் இருந்து முளை வெளியே வந்து தெரிகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். பயிர்களில் முளை கட்டி நன்றாக வெளியே இருந்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். அதுதான் நமது செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பயிர்களை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வது

ADVERTISEMENT

அதிக அளவு புரதச்சத்து வேண்டும் என்பதற்காக முளைகட்டிய பயிர்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளுதல் சரியானது அல்ல. உடலுக்கு அமினோ அமிலங்களும் தேவை என்பதால் சரிவிகித உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

முறையற்ற வெப்பநிலையில் பயிரை முளைக்க வைக்கக் கூடாது

பயிர்கள் முளை கட்ட சரியான வெப்பநிலை தேவை. சூடான, ஈரப்பதமான சூழல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எனவே பச்சையாகவோ அல்லது லேசாக வளர்ந்த பயிர் முளைகளை சாப்பிடுவது நிச்சயமாக அஜீரணம் அல்லது வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும். முளைகளை சாப்பிடுவதற்கு முன்பு அதன் தோற்றத்தைப் பார்த்த பிறகே சாப்பிட வேண்டும்.

முளைகட்டிய பயிர்களை எப்படி சாப்பிடலாம்?

சாலட்

முளைகட்டிய பயிருடன் சிறிது வெங்காயம், அரை தக்காளி, ஒரு வெள்ளரிக்காய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து பிறகு அதில் எலுமிச்சை சாறை சேர்க்க வேண்டும். இதனை காலை உணவாக எடுத்துக் கொண்டால் சுவையாகவும் இருக்கும் புத்துணர்ச்சியோடு இயங்கலாம்.

சாட் வகைகள்

வேக வைத்த உருளைக்கிழங்குடன் முளைகட்டிய பயிரையும் நமக்கு பிடித்த மசாலா பொருட்களையும் சேர்த்து கொத்தமல்லியை இறுதியாக தூவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

சாண்ட்விச்

கோதுமை பிரட்டில் சிறிதளவு வெண்ணை தடவ வேண்டும். பிறகு வேக வைத்த முளைகட்டிய பயிருடன் சிறிது காய்கறிகளையும் இணைத்து பிரட்டில் நடுவில் வைத்து தோசை கல்லில் இரு பக்கமும் நன்கு வெந்த பிறகு சாப்பிட்டால் சுவையான சாண்ட்விச் ரெடி.

ஒரு கப் முளைகட்டிய பயிரில் வைட்டமின் ஏ, டி,கே,பி 1, பி2, நிறைந்துள்ளது. காலை உணவாக நாம் இவற்றை எடுத்துக் கொள்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது, இது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைப்பதற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. புரதம் மற்றும் நார் சத்துக்கள் நிறைந்துள்ளதால் எடை குறைப்பிற்கும் உதவுகிறது

பயிர்களை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது, அதிகமாக அல்லது தொடர்ந்து எடுத்துக் கொள்வது சிலருக்கு அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தலாம். எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Santhosh Raj Saravanan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel